Home /News /business /

இன்னும் 6 நாளில் இதை செய்தால் பிரதமரின் விவசாய திட்டத்தில் ₹4000 பெறலாம்...!

இன்னும் 6 நாளில் இதை செய்தால் பிரதமரின் விவசாய திட்டத்தில் ₹4000 பெறலாம்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

PM Kisan: நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான நிதி உதவி திட்டத்தை முதன் முதலில் தெலுங்கானா மாநிலம் செயல்படுத்தியது.

  • News18
  • Last Updated :
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பலனடைய தகுதியான பல விவசாயிகள் இன்னும் இந்த ஸ்கீமில் இணையாமல் இருக்கிறார்கள்.

இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதியுடைய விவசாயிகள், இந்த மாத இறுதிக்குள் இணைந்தால் காலாண்டுக்கு ரூ.2000 நிதி டெபாசிட் செய்யப்படுவதற்கு பதிலாக, ரூ.4000 நிதியானது குறிப்பிட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் விவசாயிகளின், விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டால் ரூ.2,000 நிதியானது அக்டோபர் அலல்து நவம்பர் மாதத்திற்குள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், மீதமுள்ள ரூ.2,000 நிதி மற்றொரு தவணையாக வரும் டிசம்பர் இறுதிக்குள் செலுத்தப்படும் என்றும் தெரிகிறது.

தகுதி உடைய விவசாயிகள் இந்த தொகையை தொகையைப் பெற PM கிசான் சம்மன் நிதி யோஜனா போர்ட்டலில் தங்களை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM KISAN) கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் நலிந்த விவசாயிகள் இதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் முன்பு பெற்ற ரூ.6000 நிதிக்கு பதில், ரூ.12000 பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் PM KISAN திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 12.14 கோடி விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான நிதி உதவி திட்டத்தை முதன் முதலில் தெலுங்கானா மாநிலம் செயல்படுத்தியது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றதை அடுத்து, மத்திய அரசின் சார்பில் பிரதமர் மோடி கடந்த 2019 பிப்ரவரியில், சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி தொடக்கி வைத்தார். வேளாண் கடன் தள்ளுபடியை விட, நலிந்த விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த திட்டத்தில் நிதி செலவிடுவது சிறப்பான முடிவு என்று பொருளாதார வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் ரிஜிஸ்டர் செய்யும் வழிமுறைகள்:

* முதலில் PM Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். (https://pmkisan.gov.in/)

* வெப்சைட்டின் வலதுபுறம் கொடுக்கப்பட்டிருக்கும் Farmers Corner ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

* பின்னர் அங்கே முதலாவதாக உள்ள ‘New Farmer Registration’ ஆப்ஷனை க்க்ளிக் செய்ய வேண்டும்.

* இதன் பின் தகுதி வாய்ந்த விவசாயியின் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.

Also read... உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!

* பின் அந்த விவசாயி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதயும் செலக்ட் செய்து, இதனுடன், கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்ய வேண்டும்.

* பின்னர் தோன்றும் படிவத்தில் குறிப்பிட்ட விவசாயியின் முழு தனிப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும்.

* இதனுடன் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் விவசாயியின் நிலம் தொடர்பான தகவல்கள் நிரப்பப்பட வேண்டும்.

* இறுதியாக தகுதி வாய்ந்த விவசாயியின் தகவல்கள் நிரப்பப்பட்ட படிவத்தை சப்மிட் செய்ய வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Farmers

அடுத்த செய்தி