PM-KISAN திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் கண்டிப்பாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
PM கிசான் திட்டம் என்பது நரேந்திர மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல அரசாங்க ஆதரவு ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். நிதி உதவி தேவைப்படும் விவசாயி குடும்பங்களுக்கு ஆதரவாக 2018 டிசம்பரில் இந்தத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. விவசாய குடும்பங்களுக்கு உதவுவதற்காக 2022 நிதியாண்டில் PM KISAN திட்டத்திற்காக இதுவரை 43,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க.. தினமும் 2 ஜிபி டேட்டா.. ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PIV-KISAN) என்பது, நாட்டில் உள்ள அனைத்து நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருமான ஆதரவை வழங்குவதற்கான ஒரு புதிய மத்தியத் துறைத் திட்டமாகும். இந்த திட்டத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவைகள் தொடர்பான உள்ளீடுகள் ஆகியவை அடங்கும். PM கிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்
விவசாயிகள், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ PM Kisan போர்ட்டலில் உள்ள விவசாயிகள் கார்னர் மூலம் தங்களது நிலையைச் சரிபார்க்கலாம்.
இதையும் படிங்க.. இன்ஷூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்கள் நாமினிக்கு மொத்த பணமும் சேர இதை செய்திடுங்கள்!
பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. 11ஆவது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, 11வது தவணை மார்ச் 1 2022 வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இதில் தாமதம் ஏற்பட்டால் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணம் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், பயனாளிகள்
PM Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in இல் உள்நுழைந்து சரிபார்த்து கொள்ளலாம்
அதே போல் இந்த திட்டத்தில் பயன்பெற கேஒய்சி அப்டேட் முக்கியம். கிசான் வெப்சைட்டில் உள்ள ’farmers corner' வசதியில் இ-கேஒய்சி முடிக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.