• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • PM-KISAN: பிரதமரின் விவசாய திட்டம்... விவசாயிகளுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு!

PM-KISAN: பிரதமரின் விவசாய திட்டம்... விவசாயிகளுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

PM Kisan Samman Nidhi Yojana: இந்த தகவல் ஒருபுறம் இருக்கையில், PM-KISAN திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  • Share this:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது. நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே நாட்டில் இருக்கும் சில முன்னணி ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு தீபாவளிக்குள் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தர கூடிய வகையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவசாயிகளுக்கான தீபாவளி பரிசு உண்மையாகவே அறிவிக்கப்பட்டால், இதுவரை PM-KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.6000 நிதியானது, ரூ.12,000-ஆக உயரும். தற்போது தவணை ஒன்றுக்கு ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த தவணை தொகையும் ரூ.4,000-ஆக உயரும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டிலுள்ள 11.37 கோடி விவசாயிகளுக்கு, சுமார் 1.58 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக பீகார் விவசாய அமைச்சரான அமரேந்திர பிரதாப் சிங், தலைநகர் டெல்லியில் மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த பின் கூறிய தகவல்கள் காரணமாகவே தற்போது ஊடகங்களில் PM-KISAN நிதி உதவி இரட்டிப்பாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முக்கியத்துவம் பெற்று உள்ளன.

முன்னதாக மத்திய அமைச்சர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அமைச்சர் அமரேந்திர பிரதாப் சிங், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (பிஎம் கிசான்) கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொகை இரட்டிப்பாக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Also read... Bharat Pe மீதான வழக்கை திரும்பப்பெற்றது Phone Pe - புதிய வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு!

இந்த தகவல் ஒருபுறம் இருக்கையில், PM-KISAN திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 25, 2020 அன்று விவசாயிகளின் கணக்கில் நிதி டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு இந்த நாளுக்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 10-ஆம் தவணை வரும் டிசம்பர் 15 அன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு தவணை நிதியை டெபாசிட் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விரும்பும் விவசாயிகள் வரும் அக்டோபர் 30 அல்லது அதற்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: