ஹோம் /நியூஸ் /வணிகம் /

PM KISAN : ரூ. 2000 கிடைக்க விவசாயிகள் ஜூலை 31க்குள் இதை கட்டாயம் செய்து விடுங்கள்!

PM KISAN : ரூ. 2000 கிடைக்க விவசாயிகள் ஜூலை 31க்குள் இதை கட்டாயம் செய்து விடுங்கள்!

பிம் எம் கிசான்

பிம் எம் கிசான்

PM KISAN Samman Nidhi : PM Kisan e-KYC செயல்முறையை நீங்கள் முடிக்க விரும்பினால், உங்களுக்கான படிப்படியான வழிகாட்டி இதோ

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் பலன் பெறும் விவசாயிகள் கவனத்திற்கு, eKYC-ஐ வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள்  அப்டேட் செய்ய வேண்டும். அப்போது தான் கிசான் திட்டத்தின் 12வது தவணை வங்கி கணக்குக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது.சமீபத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளின் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது. மே 31, 2022 அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் ரூ.2000 விவசாயிகள் குடும்பங்களுக்கு வந்து சேர்ந்தது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சுமார் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

  gold scheme: தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.. முழு விவரம் இதோ!

  இந்நிலையில், பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் பலன் பெறும் விவசாயிகள் தங்களது இகேஒய்சியை முடிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் eKYCக்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. இந்த தேதியை அரசு நீட்டிப்பது இது இரண்டாவது முறையாகும். eKYCக்கான புதிய கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும்.முன்னதாக, பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு வழங்கியிருந்தது. இத்தகைய சூழலில், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், “பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டப் பயனாளிகள் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது’’

  டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மாற்றம்!

  "PMKISAN பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது. அல்லது அருகிலுள்ள CSC மையங்களை பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு தொடர்பு கொள்ளலாம். தற்போது, ​​விவசாயிகள் தங்களின் PM கிசான் 12வது தவணைக்காக காத்திருக்கின்றனர். PM Kisan e-KYC செயல்முறையை நீங்கள் முடிக்க விரும்பினால், உங்களுக்கான படிப்படியான வழிகாட்டி இதோ:

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - pmkisan.nic.in

  2. 'ஃபார்மர்ஸ் கார்னர்' பிரிவின் கீழ் 'eKYC' என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. 'OTP அடிப்படையிலான eKYC' பிரிவின் கீழ், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்

  4. 'தேடல்' என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, 'Get OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. OTP ஐ உள்ளிடவும் மற்றும்

  7. உள்ளிட்ட விவரங்களை வெற்றிகரமாகச் சரிபார்த்தவுடன் eKYC முடிக்கப்படும்.

  ஏதேனும் கேள்வி அல்லது உதவிக்கு, பயனாளிகள் PM-Kisan ஹெல்ப்லைன் எண்: 011-24300606,155261 ஐ தொடர்பு கொள்ளலாம். ஆதார் OTP தொடர்பான பிரச்சனைகளுக்கு aead@nic.in ஐ தொடர்பு கொள்ளலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Govt Scheme, PM Kisan