தேர்தலுக்கு முன்பே விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்க இருக்கும் மத்திய அரசு!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75,000 கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளனர்.

news18
Updated: February 5, 2019, 10:55 AM IST
தேர்தலுக்கு முன்பே விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி அளிக்க இருக்கும் மத்திய அரசு!
தமிழக விவசாயிகள்
news18
Updated: February 5, 2019, 10:55 AM IST
மத்திய அரசு பட்ஜெட்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் (PM-KISAN) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை 2,000 ரூபாய் என வருடத்திற்கு 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

தற்போது தேர்தலுக்கு முன்பு இந்த நிதி உதவியை விவசாயிகளுக்கு அளித்தால் வாக்குகளை எளிதாகக் கவர முடியும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனவே விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் முதல் தவணையை ஃபிப்ரவரி மாதம் இறுதிக்குள் வழங்கி விட்டால் தேர்தலுக்கு முன்பு இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் அளிக்க முடியும் என்று அரசு நினைக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் அதிகப்படியான விவசாயிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ளதால் யோகி ஆதித்யநாத் இந்த நிதி உதவியை வேகமாக அளிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார். இது தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்திரப்பிரதேச மாநில எதிர் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசிடமிருந்து நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75,000 கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளனர்.
Loading...
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இந்த நிதி உதவியானது ஏழை விவசாயிகளின் வருவாயாக மட்டுமில்லாமல் பயிர் காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியாகவும் இருக்கும். இதனால் கடன் வாங்குவது குறைந்து விவசாயிகள் கவுரமாக வாழ வழிவகுக்கும்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி என்பது ஏமாற்று வேலை - மு.க.ஸ்டாலின்
First published: February 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...