Home /News /business /

PM kisan : இன்னும் 4 நாட்களே உள்ளன.. ரூ. 2000 பெற கட்டாயம் இதை செய்துவிடுங்கள்!

PM kisan : இன்னும் 4 நாட்களே உள்ளன.. ரூ. 2000 பெற கட்டாயம் இதை செய்துவிடுங்கள்!

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

PM kisan Pradhan Mantr : eKYC யை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீண்டும் ஆகஸ்ட் 31, 2022 க்குள் நீட்டித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    PM kisan மூலம் 12வது உதவித்தொகையைப் பெறும் விவசாயிகளின் நலன்களுக்காக ekyc பதிவிற்காக காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31 க்குள் அனைத்து விபரங்களையும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்துக் கொள்ள வேண்டும்.

    விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாக இருக்கவும் மற்றும் அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூபாய் 6,000 அவர்களது வங்கிக்கணக்கிலேயே 3 தவணைகளாக செலுத்தப்படுகிறது. கடந்த மே 31 ஆம் தேதி இத்திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளுக்கு சுமார் 21,000 கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். முன்னதாக முறையாக விவசாயி நிலம் உள்ள விவசாயிகளுக்காகத் தான் இப்பணம் சென்றடைகிறதா? என்பதை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

    தங்கத்தில் முதலீடு செய்யனும்னு ஐடியா இருக்கா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க

    இதன் படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது eKYc யை அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, முகவரி சரிப்பார்ப்பு, விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இதுபோன்று eKYc அப்டேட் செய்வதற்கான காலக்கெடு கடந்த மே 31 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னதாக ஜூலை 31, 2022 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் தான் PM கிசான் இணையதளத்தின்படி, "அனைத்து PM KISAN பயனாளிகளுக்காக eKYC யை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீண்டும் ஆகஸ்ட் 31, 2022 க்குள் நீட்டித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. eKYc யை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சரிப்பார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

    PM kisan ல் eKYC யை ஆன்லைனில் அப்டேட் செய்யும் முறை:

    1. முதலில் நீங்கள் https://pmkisan.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
    2. பின்னர் Farmer corner ல் உள்ள eKYC யை கிளிக் செய்ய வேண்டும்.
    3. இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை என்டர் செய்ய வேண்டும்.
    4. இறுதியில் உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை என்டர் செய்து, PM kissanல் உள்ள விபரங்கள் சரியானதாக உள்ளதா? என தெரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீமியம் நீண்ட காலமாக கட்டாமல் உள்ளீர்களா...? மீண்டும் புதுப்பிக்க எல்.ஐ.சி சூப்பர் அறிவிப்பு

    PM kisan ல் eKYC யை ஆஃப்லைனில் அப்டேட் செய்யும் முறை:

    PM Kisan eKYC யை பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி ஆஃப்லைனிலும் விவசாயிகள் அப்டேட் செய்யலாம். விவசாயிகள் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று அனைத்து விபரங்களையும் கொடுத்து நீங்கள் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு eKYC யை அப்டேட் செய்யப்பட்ட பிறகு தகுதி வாய்ந்த விவசாயிகளின் கணக்கில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி கணக்கில் வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    ஒருவேளை உங்களது விபரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், அரசு வழங்கும் அபராதத் தொகையை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, PM Kisan

    அடுத்த செய்தி