பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை விரைவில் அரசு அதிகரிக்கலாம் என்பதே.
இதற்கிடையே இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000, அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) இணைந்த விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் (BKS) சமீபத்தில் நாட்டின் தலைநகர் டெல்லியில் நாடு தழுவிய கண்டன பேரணியை நடத்தியது. இந்த போராட்டத்தின் போது நாட்டிலுள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்த மேலும் பல நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டது.
பாரதிய கிசான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான Nana Akhare பேசுகையில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் உள்ளிட்ட பலவற்றை பெரிய அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுத்தாலும், அவர்களால் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற சரியான விலையைப் பெற முடியவில்லை. இதன் காரணமாக பாதிக்கப்படும் எண்ணற்ற விவசாயிகள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. எனவே அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் நியாயமான விலையை அரசு உறுதி செய்ய வேண்டும். தவிர விவசாய விளைபொருட்களுக்கு GST விதிக்க கூடாது, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை அங்கீகரிக்க கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Read More : ஹோம் லோன் வாங்கும் போது இந்த 5 தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்
முக்கிய கோரிக்கை:
பாரதிய கிசான் சங்கத்தின் மற்றொரு மிக முக்கிய கோரிக்கை PM Kisan Yojana திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் வழங்கப்பட்டு வரும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. தற்போது ரூ.6000-ஆக இருக்கும் இந்த நிதி உதவி தொகையை மேலும் ரூ.2,000 அதிகரித்து ரூ.8,000-ஆக வழங்க வேண்டும் என்பது BKS-ன் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழான நிதியை அதிகரிப்பது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என BKS அமைப்பு கூறுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் விரும்புகின்றனர்.
இதுவரை விவசாயிகளின் கணக்கில் 12 தவணைகள் நிதி டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், 13-ஆம் தவணை நிதி இந்த மாத இறுதிக்குள் (டிசம்பர், 2022) விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் பல முக்கிய விவசாய அமைப்புகள், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து கவனம் ஈர்த்து வருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு அப்படியே ஏற்று கொண்டால் 3 தவணைகளில் தலா ரூ.2,000 வழங்கப்படுவதற்கு பதில் 4 தவணைகளில் ரூ.8,000 நிதி உதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட்டட் லிஸ்ட்டை சரி பார்க்க PM Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று Farmers corner செக்ஷனுக்கு சென்று Beneficiary list-ஐ கிளிக் செய்ய வேண்டும். தேவையான விவரங்களை கவனமாக என்டர் செய்து Get data-வை கிளிக் செய்யவும். லிஸ்ட் ஸ்கிரீனில் தோன்றும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.