Home /News /business /

விவசாயிகள் பென்சன் பெற உதவும் புதிய திட்டம் - மத்திய அரசு அறிமுகம்.!

விவசாயிகள் பென்சன் பெற உதவும் புதிய திட்டம் - மத்திய அரசு அறிமுகம்.!

பென்சன்

பென்சன்

PM Kisan MaanDhan Yojana | விவசாயிகளின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, 60 வயதை எட்டியவுடன் மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரம் பென்சன் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஆரம்பித்த முதலீட்டு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்றாலும் அங்குள்ள விவசாயிகள் படும் துயரத்தை வார்த்தைகளால் சொல்லி தீராது. நிலத்தில் அயராது உழைத்துப் பாடுபட்டாலும் இவர்களுக்கென்று எதையும் சேர்த்து வைப்பதில்லை. இதனால் தான் எதிர்காலத்தில் எவ்வித வருமானமும் இன்றி தவிக்கின்றனர். இந்த நிலையையெல்லாம் மனதில் வைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் எதிர்காலத் தேவைகளை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா. இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் 60 வயதை எட்டியவுடன் மாதம் ரூ. 3000 ஆயிரம் பென்சன் வழங்கப்படும். எப்படி இத்திட்டத்தில் சேருவது? என்னென்ன தேவை? என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்?

இந்தியாவில் 2 ஹக்டேர் அதாவது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் விவசாயிகள் உள்பட 18 வயது முதல் 40 வயதில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் இணையலாம்.

இத்திட்டத்தின் கீழ் பென்சன் பெற வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்தவரை ரூ.55 முதல் ரூ. 200 வரை முதலீடு செய்துக் கொண்டு, 60 வயதை எட்டியவுடன் நீங்கள் மாதந்தோறும் ரூ. 3000 பென்சன் பெறமுடியும்.



 

பி.எம் கிசான் ஓய்வூதியத்திற்காக பதிவு செய்யும் முறை :

பி.எம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் முதலில் உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல்களை வைத்திருக்க வேண்டும். வருமான சான்றிதழ், நில உரிமையை உறுதி செய்யும் பட்டா, வயது சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொண்டு செல்லுங்கள்.

Also Read : மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!

ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் முனைவோருக்கான ஆரம்ப பங்களிப்பு தொகை பணமாக வழங்கப்படுவதற்கான சான்றுகளை உடன் வைத்திருக்க வேண்டும்..

மேற்கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் வைத்து நீங்கள் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யலாம். உங்களின் வயதிற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு தொகையை மாதந்தோறும் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தானாகவே கணக்கிட்டு கொள்ளப்படும். இதன் பின்னர் தனித்துவமான கிசான் ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்பட்டு உங்களுக்கு கிசான் கார்டு வழங்கப்படும். எனவே மேற்கூறிய வழிமுறைகளின் மூலம் இனி சுலபமாக பென்சன் பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெற்றுக் கொள்ளுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Farmers, Pension Plan, PM Kisan

அடுத்த செய்தி