Home /News /business /

PM Kissan: ரூ.2000 கிடைக்க விவசாயிகள் உடனடியாக இதை செய்யுங்கள்.. இன்றே கடைசி நாள்

PM Kissan: ரூ.2000 கிடைக்க விவசாயிகள் உடனடியாக இதை செய்யுங்கள்.. இன்றே கடைசி நாள்

pm-kisan

pm-kisan

PM Kisan : விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற ஒன்றைத் தொடங்கியது.

    பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா மூலம் (PMSNY) 12 வது உதவித்தொகையை எவ்விதப் பிரச்சனைகளும் இல்லாமல் பெற வேண்டும் என்றால், விவசாயிகள் முதலில் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, முகவரி சரிப்பார்ப்பு, விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக eKYC யை அப்டேட் செய்வதற்கு இன்று தான் கடைசி தேதி.

    விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற ஒன்றைத் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு ரூ. 6,000 அவர்களது வங்கிக்கணக்கிலேயே 3 தவணைகளாக செலுத்தப்படுகிறது. இந்த சூழலில் தான், பிஎம் கிசான் மூலம் 12 =வது தவணைத் தொகை வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்து வருகிறது. மேலும் அரசாங்கத்தால் விவசாயிகள் தங்களது eKYc அப்டேட் செய்வதற்கானக் கடைசி தேதியை மே 31, 2022 லிருந்து ஜூலை 31, 2022 வரை நீட்டித்துள்ளது. எனவே இன்றுடன் சேர்ந்து இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக அப்பேட் செய்வதற்கான வழிமுறைகள் இங்கே…

    PM kissan ல் eKYC யை ஆன்லைன் வாயிலாக அப்பேட் செய்யும் முறை:

    முதலில், https://pmkisan.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    பின்னர் Farmer cornerல் உள்ள eKYCயை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து அப்பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை என்டர் செய்ய வேண்டும்.

    இறுதியில் உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை என்டர் செய்து, PM kissanல் உள்ள விபரங்கள் சரியானதாக உள்ளதா? என தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒருவேளை உங்களது ஆதார் ஆவணங்கள் பொருத்தமில்லாமல் இருந்தால் உடனடியாக சரிசெய்துக்கொள்ள முயலுங்கள். இல்லாவிடில் உங்களால் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியைப்பெற முடியாது.

    குறிப்பாக PM kissan தொடங்கும் போது இருந்த முகவரி தான் தற்போது உள்ளதா? என அறிந்து கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்களது ஆதார் விபரங்களை வங்கிக்கணக்கில் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

    PM Kisan eKYC ஆஃப்லைனில் செய்யும் முறை :

    PM Kisan eKYC ஆனது பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைனிலும் செய்யப்படலாம். விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று தங்களது பயோமெட்ரிக் விவரங்களை சரிப்பார்த்து கொள்ளலாம். விவரங்கள் எதுவும் சரியாக இல்லையென்றால், தவணைத்தொகைப் பெற முடியாது.

    சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக அளித்துவருகிறது. இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Central government, Farmers, PM Kisan

    அடுத்த செய்தி