Home /News /business /

PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!

PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!

பிரதம மந்திரி கிசான்

பிரதம மந்திரி கிசான்

PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும்.

    பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    பி.எம். கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும். இதுவரை இந்த திட்டத்தில் 10 தவணைகள் விவசாயிகள் கணக்கில் வந்து சேர்ந்துள்ளன. 11வது தவணை இந்த மாத இறுதியில் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் பலனை பெற நீங்கள் முதலில் இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். நில ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் எடுத்துச் சென்று உள்ளூரில் இருக்கும் வேளாண்மை அலுவலகத்தில், கிசான் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும் www.pmkisan என்ற தளத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். PM Kisan App வழியாகவும் உங்கள் விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க.. Canara Bank : மறுபடியும் உயர்ந்த வட்டி.. பிக்சட் டெபாசிட் முதலீடுக்கு இதுதான் சரியான நேரம்!

    அதே போல் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். ஆதார் அடிப்படையிலான ஒடிபி முறைக்கு உழவர் இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக் செய்ய இதனை அப்டேட் செய்யலாம். இதுப்பற்றி தெரியாவதர்கள் கவனத்திற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் பயன் பெற எப்படி இகேஒய்சியை ஆன்லைனில் அப்டேட் செய்வது பற்றி இப்போது பார்க்கலாம்.

    PM-Kisan அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

    வலது பக்கத்தில் இருக்கும் eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்

    அடுத்து ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Search ஐகானை கிளிக் செய்யவும்

    அடுத்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்

    இதையும் படிங்க.. ஏப்ரல் 4 முதல் ரூல்ஸ் மாறுது.. பஞ்சாப் நேஷனல் வங்கி சொன்ன அதிர்ச்சி தகவல்!

    அதன்பிறகு Get OTP என்பதைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட புலத்தில் ஒடிபி-ஐ உள்ளிடவும்

    இப்போது உங்கள் eKYC அப்டேட் வெற்றிக்கரமாக முடிந்தது என்ற செய்தியை காண்பீர்கள்.

    அதே போல் இந்த கிசான் திட்டத்தில் நீங்கள் பதிவு செய்த பிறகும் உங்களுக்கு தவணை கிடைக்கவில்லை என்றால் pmkisan.gov.in. என்ற ஆன்லைன் தளத்துக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் விவசாயிகள் பக்கம் (farmer's corner) கிளிக் செய்தபிறகு பயனாளர் நிலவரம் (beneficiary status) என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அந்தப் பக்கத்தில் நுழைந்தவுடன் ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், மொபைல் எண் ஆகிவை இருக்கும். பதிவேற்றப்பட்ட உங்களுடைய தகவல்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பொறுமையாக மேற்பார்வையிடுங்கள். இதில் ஏதேனும் தவறு இருந்தால் உடனே அப்டேட் செய்யுங்கள். பிழை நீங்கிய பிறகு பணம் வந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Loan, Modi, PM Kisan

    அடுத்த செய்தி