இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாக இருக்கும் விதமாக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கிலேயே 3 தவணைகளாக செலுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த மே 31 அன்று இத்திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளுக்கு சுமார் 21 ஆயிரம் கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார்.
இதனால் பல விவசாயிகள் பலன் அடைந்திருந்தாலும் சில விவசாயிகளுக்கு உரிய தேதி முடிந்த போதும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் தான் பிஎம் கிசான் மூலம் 12 வது தவணைத் தொகை வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும் அரசாங்கத்தால் விவசாயிகள் தங்களது eKYc அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை மே 31, 2022 லிருந்து ஜூலை 31, 2022 வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து விவசாயிகள் தங்களது eKYc யை அப்பேட் செய்துவந்தனர். இருந்தப்போதும் ஆதார் மற்றும் வங்கிக்கணக்கில் உள்ள பெயர் திருத்தம் போன்ற பல சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தமையால் அனைத்து விவசாயிகளினாலும் தங்களது அடிப்படை தகவல்களை அப்டேட் செய்ய முடியவில்லை.
விவசாயிகளின் நலன்களைக் கருதி மீண்டும் eKYC அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை உங்களது தகவல்களை அப்டேட் செய்யாமல் இருந்தால் கீழ்வரும் வழிமுறையைப் பின்பற்றிக்கொள்ளுங்கள்.
Also Read : அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு.!
PM kissan ல் eKYC யை அப்டேட் செய்யும் முறை:
முதலில், https://pmkisan.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் Farmer corner ல் உள்ள eKYC யை கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை என்டர் செய்ய வேண்டும்.
இறுதியில் உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை என்டர் செய்து, PM kissan ல் உள்ள விபரங்கள் சரியானதாக உள்ளதா? என தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்கு முன்னதாக பெரும்பாலும் விவசாயிகள் செய்ய தவறும் முக்கிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். இல்லாவிடில் உதவித்தொகையை நீங்கள் பெற முடியாமல் போய்விடும்..
ஆவணங்கள் பொருந்தமில்லாமல் இருப்பது:
PM kisan விண்ணப்பப்படிவம் மற்றும் ஆதார் ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள உங்களது பெயர் பொருந்தமில்லாமல் இருக்கும். எனவே இது போன்ற நேரங்களில் எவ்வித முரண்பாடுகள் இல்லாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Also Read : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.!
முகவரி புதுப்பித்தல்:
உங்களுக்கு பிஎம் கிசான் தவணைத்தொகை நிராகரிப்பிற்கு மற்றொரு காரணம் உங்களது 'முகவரி'. எனவே நீங்கள் வழங்கிய முகவரி மற்றும் ஆதாரில் உள்ள முகவரி சரியாக உள்ளதா? என தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் உங்களது ஆதார் விபரங்களை உங்களது வங்கிக்கணக்கில் அப்டேட் செய்யுங்கள். இல்லாவிடில் நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே தற்போது அரசு அறிவித்துள்ள காலக்கெடுவிற்குள் உங்களது அனைத்து விபரங்களையும் அப்டேட் செய்து எவ்வித இடையூறு இல்லாமல் நீங்கள் பெற்றுக்கொள்ள முயலுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, India, PM Kisan