Home /News /business /

பிஎம் கிசான் திட்டத்திற்கான eKYC காலக்கெடு நீட்டிப்பு.. ஆனால் ஒரு சிக்கல்!

பிஎம் கிசான் திட்டத்திற்கான eKYC காலக்கெடு நீட்டிப்பு.. ஆனால் ஒரு சிக்கல்!

காட்சி படம்

காட்சி படம்

PM KISAN eKYC Deadline Extended : அனைத்து பிஎம் கிசான் பயனாளிகளுக்கும் இ-கேஒய்சி இன் காலக்கெடு மே 22 ஆம் தேதி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான ஒரு நற்செய்தியாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி அல்லது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கான இ-கேஒய்சி (eKYC) செயல்பாட்டை முடிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த காலக்கெடு தற்போது மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

"அனைத்து பிஎம் கிசான் பயனாளிகளுக்கும் இ-கேஒய்சி இன் காலக்கெடு மே 22 ஆம் தேதி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று பிஎம் கிசான் இணையதளத்தில் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் தங்கள் வருடாந்திர நிதியை தொடர்ந்து பெற இ-கேஒய்சி செயல்முறையை செய்வது கட்டாயம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அறியாதோர்களுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி அல்லது பிஎம்-கிசான் என்பது மத்தியத் துறையின் ஒரு நேரடிப் பலன் பரிமாற்ற (Direct Benefit Transfer - DBT) திட்டமாகும், இது ஒவ்வொரு தகுதியான விவசாயிக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ், நிதி உதவி தேவைப்படும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

also read : சொத்து வரி உயர்வு.. உங்கள் சொத்துக்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும்..? முழு விவரம்
 

மேற்குறிப்பிட்ட தவணைகளை வெளியிட, பிஎம்-கிசான் போர்டல் ஆனது விவசாயிகளின் ஆதார் விவரங்களை பயன்படுத்துகிறது, இதன் கீழ் இ-கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலக்கெடுவின் சமீபத்திய நீட்டிப்புக்குப் பிறகு, பிஎம்-கிசான் போர்ட்டலில் இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கான விருப்பம் கிடைக்காது மற்றும் பிஎம்-கிசான் இணையதளத்தின்படி, “பிஎம்கிசானில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயம். தயவுகூர்ந்து பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக அருகிலுள்ள சிஎஸ்சி (CSC) மையங்களைத் தொடர்பு கொள்ளவும். ஒடிபி வழியிலான ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி செயல்முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது."

இதன் பொருள், தகுதியான விவசாயிகள் தற்போது ஆதார் அட்டையின் உதவியுடன் ஒடிபி அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் இ-கேஒய்சி ஐ முடிக்க முடியாது. பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மட்டுமே பிஎம் கிசான் இ-கேஒய்சி முடிக்க முடியும். ஆக விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று தத்தம் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கி செயல்முறையை முடிக்கலாம். பிஎம் கிசான் திட்டத்தின் 11வது தவணையைப் பெற இது அவசியமாகும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆஃப்லைனில் இ-கேஒய்சி செயல்முறை செய்யப்பட்ட பிறகு, தகுதியான விவசாயிகளின் கணக்கில் ரூ.2,000 டெபாசிட் செய்யப்படும்.

also read : இன்னும் 2 நாட்களில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் கை மேலே பலன் !

தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். அதே சமயம் நிறுவன நில உரிமையாளர்கள் (institutional landholders) மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்த பயனும் பெற மாட்டார்கள். பிஎம் கிசான் இணையதளத்தில் உள்ள ஒரு குறிப்பு, "நாட்டில் நிலத்தை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் வருமான ஆதரவை வழங்குவதற்கான ஒரு மத்தியத் துறை திட்டமாகும்" என்று இந்த திட்டத்தை குறித்து விவரிக்கிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: PM Kisan

அடுத்த செய்தி