ஹோம் /நியூஸ் /வணிகம் /

PM kisan: ரூ. 2000 பெறும் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? செக் செய்வது ரொம்ப சுலபம்!

PM kisan: ரூ. 2000 பெறும் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? செக் செய்வது ரொம்ப சுலபம்!

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

PM Kisan Beneficiary List : பி.எம் கிசான் திட்டத்திற்குத் தகுதியுள்ள விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக எங்கிருந்தாலும் அப்டேட் செய்துக்கொள்ளலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாக மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்குஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கிலேயே மூன்று தவணைகளாகச் செலுத்தப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திலும் விவசாயிகளின் நலன் கருதி ரூபாய் 2 ஆயிரம் தவணைத் தொகையை விவசாயிகளின் கணக்கிற்கு அரசாங்கம் மாற்றியது. இவ்வாறு விவசாயிகளின் நலன் கருதி செயல்பட்டுவரும் இத்திட்டத்தில் 12வது தவணைத் தொகை செலுத்துவதற்காக ஒவ்வொரு விவசாயிகளும் தங்களின் விபரங்களை அப்டேட் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.

  இதன்படி விவசாயிகள் தங்களின் விபரங்களை வழங்கியிருந்தாலும் சிலரின் பெயர் தகுதியுடையவர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஒருவேளை நீங்களும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்குத் தகுதியுடைவர்களாக இருந்தும் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றால் கவலை வேண்டாம். மிகவும் சுலபமாக ஆன்லைன் வாயிலாக நீங்களே பயனாளர்களின் பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா? என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

  Pm kisan பயனாளர்களின் விபரங்களைக் கண்டறியும் முறை…

  பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்களாக இருந்தாலும் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றால் முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணைய தளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள Farmer corner என்பதை கிளிக் செய்துக் கொண்டு பயனாளி பட்டியல் ( beneficiary list) யை கிளிக் செய்ய வேண்டும்.

  வீடு வாங்கும் போது மட்டுமில்லை விற்கும் போதும் வரி கட்ட வேண்டும்..! ஏன் தெரியுமா?

  இதனைத் தொடர்ந்து அப்பக்கத்தில், உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விபரங்களை உள்ளீடு செய்துக் கொண்டு Get Report என்பதைக் கிளிக் செய்தால் போதும் முழுமையான பட்டியல் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

  இதோடு மட்டுமின்றி மேலும் சில வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்றலாம்.

  புதிய விவசாயிகளின் பதிவு:

  பி.எம் கிசான் திட்டத்திற்குத் தகுதியுள்ள விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக எங்கிருந்தாலும் அப்டேட் செய்துக்கொள்ளலாம். நீங்கள் உங்களது சுய விபரங்களுடன் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பும் போது உங்களின் அனைத்து விபரங்களும் தானாகவே மாநில அதிகாரிகளுக்கு மதிப்பாய்வுக்கு அனுப்பப்படும். இதனையடுத்து உங்களின் தகவல்கள் சரிப்பார்க்கப்பட்டு பிஎம் கிசான் தளத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

  ஆதார் விவரங்களைச் சரிபார்த்தல் :

  உங்களது பிஎம் கிசான் நிதி வரவில்லையென்றால் ஆதார் விபரங்களை முதலில் சரிபார்க்க வேண்டும். வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டையிலுள்ள பெயர் மற்றும் முகவரி சரியாக இல்லையென்றால் நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும்

  அந்த முக்கியமான சேமிப்பு திட்டத்துக்கு வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி!

  இதோடு மட்டுமின்றி ஆதார் எண், வங்கிக்கணக்கு எண்அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் மூலமாகவும் தவணைத் தொகையின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதுவரைமத்திய அரசு விவசாயிகளின் நலன்களுக்காக ரூபாய் 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Govt Scheme, Modi, PM Kisan