ஹோம் /நியூஸ் /வணிகம் /

PM Kisan : தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 - மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்

PM Kisan : தீபாவளிக்கு முன் உங்கள் அக்கவுண்ட்டில் ரூ.2000 - மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்

பிம் கிஷான்

பிம் கிஷான்

PM Kisan | ரூ.6,000 நிதி உதவியானது இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் அவர்களின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் 12-வது தவணை நிதிக்காக ஆவலுடன் காத்திருக்கும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. PM Kisan என்பது இந்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய மத்திய துறை திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஒரு நிதியாண்டிற்கு ரூ.6,000 வீதம் 3 சம தவணைகளில் வருமான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.6,000 நிதி உதவியானது இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் அவர்களின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் திட்ட வழிகாட்டுதல்களின்படி நிதிஉதவி பெற தகுதியான விவசாயி குடும்பங்கள் அடையாளம் காணப்படுகிறது. கடந்த மே மாதம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 11-வது தவணையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நிலையில் 12-வது தவணை நிதியானது தகுதியுள்ள விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக வரும் அக்டோபர் 17-ம் தேதி 12-வது தவணை நிதி விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம்... குறைந்தது தங்கம் விலை..!

முன்னணி ஊடகங்களின் சமீபத்திய அறிக்கைகளின்படி, அக்டோபர் 17-ல் வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டடிருக்கும் 2 நாள் உச்சி மாநாடு மற்றும் கிசான் மாநாட்டின் தொடக்க விழாவில் 12-வது தவணை நிதி வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல தான் கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று PM-KISAN பயனாளிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் ரூ.2000 வரவு வைக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் இந்த நிதி பரிமாற்றம் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

கட்டாய eKYC:

PMKISAN திட்டத்தின் மூலம் பலன் பெற பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் eKYC ப்ராசஸ் முடித்த விவசாயிகள் மட்டுமே திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் என்று அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஏற்கனவே eKYC காலக்கெடுவை மே 31 முதல் ஜூலை 31 வரை நீடித்தது, பின்னரும் ஒருமாதம் வரை அவகாசம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

PM-KISAN ஆப்-ல் ஸ்டேட்டஸை எவ்வாறு சரிபார்ப்பது.?

-

PM Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து PM Kisan மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் அல்லது பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும் https://pmkisan.gov.in
இல்லை என்றால் ஆண்ட்ராய்டு டிவைஸில் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று PM Kisan App என டைப் செய்து, அங்கிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Beneficiary Status ஆப்ஷனை கிளிக் செய்து கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் என்டர் செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் எவ்வாறு ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்? - PMkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்
ஹோம்பேஜில் காணப்படும் Beneficiary Status ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் நம்பர், அக்கவுண்ட் நம்பர், மொபைல் நம்பரை இந்த மூன்றில் எதாவதொன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் தேவையான விவரங்களை கொடுக்க வேண்டும்.
பின் Get data என்பதை கிளிக் செய்தால், தேவையான விவரங்கள் டிவைஸின் ஸ்கிரீனில் காட்டப்படும்.
First published:

Tags: PM Kisan