Home /News /business /

PM Kisan | மே 31 உங்கள் கையில் ரூ.2000 - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

PM Kisan | மே 31 உங்கள் கையில் ரூ.2000 - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

PM Kisan | 11-வது தவணையை மே 31, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள 11-வது தவணை நிதிக்காக நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாயிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் PM-KISAN 11-வது தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள தேதி பற்றிய அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

    கடந்த 2019 பிப்ரவரியில் PM-KISAN திட்டம் துவக்கப்பட்ட போது சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. த்குதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் 3 முறை அவர்களின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஓர் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதி ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்து 11-ஆம் தவணை நிதிக்காக விவசாயிகள் ஆவலாக காத்திருக்கிறார்கள். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 11-வது தவணை நிதி பலன்களை தகுதியுடைய சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு நாளை (மே 31 ) வழங்க உள்ளார் பிரதமர் மோடி.

    Also Read : ஜூலை 1 முதல் மீண்டும் உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்

    பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் 11-வது தவணையை மே 31, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Azadi ka Amrit Mahotsav ஆண்டு கொண்டாட்டத்தின் கீழ், பல்வேறு மத்திய அமைச்சகங்களின் கூட்டு நிகழ்வு மே 31 (நாளை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடைபெறும் "Garib Kalyan Sammelan" என்றழைக்கப்படும் இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சியில், 9 மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் நடத்தப்படும் 16 திட்டங்கள்/திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடஉள்ளார். தவிர PM Kisan Samman Nidhi-யின் 11-வது தவணை நிதியை 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்காக அவர் வெளியிடுகிறார். இதன் மதிப்பு ரூ.21,000 கோடி. வழக்கம் போல இந்த நிதி நேரடியாக தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளைய (மே 31) நிகழ்ச்சிகளின் போது பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டங்களான பிஎம் கிசான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, போஷன் அபியான், பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் (கிராமப்புற மற்றும் நகர்ப்புற), ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ருத் ஆகியவை மக்களின் வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பது குறித்து பயனாளிகளுடன் உரையாடுவார். இந்த தேசிய நிகழ்ச்சி தூர்தர்ஷனின் தேசிய மற்றும் பிராந்திய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் MyGov மூலமாகவும் வெப்காஸ்ட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: PM Kisan

    அடுத்த செய்தி