• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • PM Kisan திட்டத்தின் கீழ் நிதியுதவியை தவிர விவசாயிகளுக்கு கிடைக்கும் மேலும் 3 நன்மைகள்...!

PM Kisan திட்டத்தின் கீழ் நிதியுதவியை தவிர விவசாயிகளுக்கு கிடைக்கும் மேலும் 3 நன்மைகள்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

PM KISAN திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்படுகிறது.

  • Share this:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் மூன்று முறை தகுதியான விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி செலுத்தப்பட்டு வருகிறது. PM KISAN திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை மத்திய அரசு நேரடியாக தலா ரூ.2000 வீதம் 9 தவணை வரவு வைத்து உள்ளது. இதனிடையே நாட்டின் முன்னணி ஊடகங்களில் வெளியாகி உள்ள அறிக்கைகளின்படி, PM KISAN திட்டத்தின் கீழ் இணைந்திருக்கும் விவசாயிகளுக்கான 10-வது தவணை நிதியானது வரும் டிசம்பர் 15 அன்று அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விவசாயிகள் பயன்பெற கூடிய பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் பிஎம் கிசான் மந்தன் யோஜனா கீழ் ஓய்வூதியம், பிஎம் கிசான் கிரெடிட் கார்டு மற்றும் பிஎம் கிசான் ஐடி கார்டுகள் உள்ளிட்டவையும் அடங்கும்.

பிஎம் கிசான் மந்தன் யோஜனா (PM Kisan Maandhan Yojana)

இந்த திட்டம் விவசாயிகளின் முதுமை காலத்தில் அவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவுவதை நோக்கமாக கொண்டது. பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில், தகுதியுடைய விவசாயிகளுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 (ஆண்டுக்கு ரூ.36,000) வரை ஓய்வூதியம் கிடைக்கும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்தவொரு விவசாயியும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். விவசாயிகள் 60 வயதை அடையும் வரை ஓய்வூதிய நிதிக்காக மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். இந்த ஓய்வூதிய நிதியில் மத்திய அரசும் அதே தொகைக்கு சமமான பங்களிப்பை வழங்கும். சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கை துணைவர்களும் இத்திட்டத்தில் தனித்தனியாக சேர தகுதியுடையவர்கள். இவர்கள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கு தனி ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படும்.

பிஎம் கிசான் கிரெடிட் கார்டு (PM Kisan Credit Card):

இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசால் பிஎம் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும். மலிவு வட்டி விகிதத்தில் விவசாயிகள் முன்பணம் எடுக்க இந்த கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன.

Also read... பிஎம் கிசான் 10-வது தவணை தேதி: விவசாயிகள் இந்த 3 திட்டத்தின் பயன்களையும் பெறலாம்!

பிஎம் கிசான் ஐடி கார்ட்ஸ் (PM Kisan ID Cards)

PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு PM Kisan ID கார்டுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ID கார்டுகள் விவசாயிகளின் நிலப் பதிவுகளை இணைத்து தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே பல்வேறு மாநிலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதை உறுதி செய்யும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: