ஹோம் /நியூஸ் /வணிகம் /

PM cares : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை!

PM cares : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை!

பிஎம் கேர்ஸ்

பிஎம் கேர்ஸ்

PM cares fund : இந்த திட்டத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளின் பெயரில் வைப்பு நிதி ஒன்று தொடங்கப்படும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று பாதிப்பால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்காக புதிய குழந்தைகள் நல திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிமுகம் செய்தார். பிஎம் கேர்ஸ் குழந்தைகள் நலத்திட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, இலவசமாக கல்வி மற்றும் அவர்கள் வளர்ந்த பிறகு கணிசமான ரொக்கத் தொகை ஆகியவை வழங்கப்படும். அதை பற்றிய முழு விவரங்கள் இங்கே.

PM கேர்ஸ் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் குழந்தைகளுக்கு நீண்டகாலத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு அடிப்படை வசதிகள், தங்குமிடம், கல்வி, கல்வி உதவித்தொகை மற்றும் அவர்கள் 23 வயதாகும் பொழுது தொழில் தொடங்குவதற்கு அல்லது எதிர்காலத்திற்கு தேவைப்படும் கணிசமான தொகை மற்றும் அவர்கள் உடல் நலத்தை காக்கும் மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது.

FIXED DEPOSIT : எந்த வங்கியில் பணத்தை போட்டால் லாபம் பார்க்கலாம்! முழு லிஸ்ட்

உலக சுகாதார நிறுவனம் கோவிட் பெருந்தொற்று காலம் என்று 11 மார்ச் 2020 முதல் 28 ஃபிப்ரவரி 2022 வரை அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், கோவிட் பெருந்தொற்று நோயால் தனது பெற்றோர் இருவரையுமே இழந்த அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது சட்டப்படி நியமிக்கப்பட்ட பாதுகாவலர் அல்லது தத்து பெற்றோரை இழந்த குழந்தைகள் இந்த திட்டத்தில் பயனடையலாம். பெற்றோர்கள் தாய் தந்தையை இழந்த நேரத்தில், குழந்தை அல்லது சிறுவன் சிறுமிக்கு 18 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டத்தின் நோக்கம் என்பது, பெற்றோர் இல்லாமல் இருக்கும் இளம் பிள்ளைகளின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் கொடுத்து, பராமரித்து அவர்கள் இளைஞர்களாக தங்கள் சொந்த காலில் நிற்கும் வரை அவர்களை வளர்த்து பராமரிப்பதாகும்.

pm kisan status : தயாராக இருங்கள்.. இந்த நாளில் ரூ.2000 அக்கவுண்டுக்கு வர போகிறதாம்!

கோவிட் வைரஸ் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல் எத்தனையோ நபர்களை குடும்பங்கள் இன்றி தவிக்க வைக்கும் என்பதையும் யாரும் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. எதிர்பாராத நேரத்தில் பெற்றோரை இழந்த இளம் பிள்ளைகளுக்கு இந்த நலத்திட்டம், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும்.

இந்த திட்டத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளின் பெயரில் வைப்பு நிதி ஒன்று தொடங்கப்படும். மேலும், ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை இலவசமாக வழங்கப்படும்; அதாவது ஒன்றாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்பு வரை குழந்தைகள் இலவசமாக படிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாதாந்திர உதவித்தொகை, மருத்துவ உதவி ஆகியவையும் 18 வயதுக்கு மேல் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் உள்ள இளம் பிள்ளைகள் 23 வயதாகும் போது அவர்களுக்கு ரொக்கமாக ₹10,00,000 வழங்கப்படும். இந்த ரொக்கத் தொகை நேரடியாக வருபவரின் அஞ்சல் கணக்கில் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.

பெற்றோரை அல்லது அப்பா அல்லது அம்மாவை இழந்த பிள்ளை இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதி இருக்கிறதா? என்பதை பின்வரும் லிங்கின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

https://pmcaresforchildren.in இந்த இணையதளத்தின் வழியாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ₹5,00,000 மதிப்புள்ள மருத்துவ காப்பீடும் வழங்கப்படும்.

First published:

Tags: Govt Scheme, PM Modi, Savings