ஹோம் /நியூஸ் /வணிகம் /

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த 4 வழிகளை அவசியம் பின்பற்றுங்கள்!

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த 4 வழிகளை அவசியம் பின்பற்றுங்கள்!

தங்கம் விலை

தங்கம் விலை

Invest in gold | தங்கம் நன்றாகச் செயல்படும் என்பது வரலாற்று ரீதியான சாட்சியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இன்றைய கால கட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வழியாக தங்கம் உள்ளது. விலை மதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும் போது, ​​மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குகள் மிகவும் நம்பிக்கையற்றவையாக இருக்கும்போது, ​​தங்கம் நன்றாகச் செயல்படும் என்பது வரலாற்று ரீதியான சாட்சியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சரிந்து வரும் பங்குச் சந்தைகள் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதற்குகேற்ப தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது. இப்போதெல்லாம், தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு முறைகள் உள்ளன. தங்க முதலீட்டின் நான்கு பிரபல வழிகளான தங்கம் நகைகள், கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் (Gold ETF), தங்கப் பத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தங்கம் ஆகியவற்றை குறித்து இனி தெரிந்து கொள்வோம்.

தங்க நகைகள்

பெரும்பாலான தங்கம் வாங்குவோர் இன்னும் அதை நகைகளாக வாங்க விரும்புகிறார்கள். நகைகளை பொறுத்தவரை அவளோ விலைமதிப்பற்ற தேர்வாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் செலவு மற்றும் மதிப்பையும் சேர்த்து கொண்டுள்ளது. இந்தியாவில், தங்கத்தை நகைகளாக வாங்குவது என்பது முதலீடு சார்ந்த விஷயமாக இல்லாமல், அது உணர்வுப்பூர்வமான மதிப்பாகவும் இருக்கிறது,.

கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்

கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் என்பது காகிதம் அல்லது டிமேட் வடிவத்தில் தங்கத்தை குறிக்கும் அலகுகள் ஆகும். தங்கத்தை உள்ளடக்கிய பங்குகளைப் போலவே கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்களும் டிமேட் கணக்கு மூலம் இதில் வர்த்தகம் செய்து கொள்ளலாம். நீங்கள் இதில் 1 கிராம் தங்கத்தில் கூட முதலீடு செய்யலாம். கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்களில் முதலீடு செய்ய, உங்களிடம் வர்த்தகக் கணக்கு அவசியம் இருக்க வேண்டும்.

கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் பொறுத்தவரை, சேமிப்பு மற்றும் திருட்டு பற்றிய விஷயங்களால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. நகைகள் வடிவில் உள்ள தங்கம் போன்றவற்றில் அதனை செய்வதற்கான கட்டணங்கள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் இல்லாததால், இது குறைந்த செலவை கொண்டுள்ளதாக இருக்கும்.

சாவேரின் தங்கப் பத்திரங்கள் (SGB)

SGB பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் அரசுப் பத்திரங்கள் ஆகும். இவற்றை கிராம் தங்கத்தில் குறிக்கப்படுகின்றனர். இவை தங்க நகைகளுக்கு மாற்றாகக் கருதப்படுகின்றன. இந்த SGB பத்திர முறையானது, முதலீட்டாளர்கள் தங்கத்தை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கின்றன மற்றும் அதன் மீது வட்டியையும் பெறவும் வழி செய்கிறது. இவற்றை வாங்கும் போது இதற்கான வெளியீட்டு விலையை பணமாக செலுத்த வேண்டும். மேலும் தங்கத்தின் தற்போதைய சந்தை விகிதத்தின்படி மீட்டெடுப்பதற்கான கட்டணமும் பணமாக அளிக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கம் என்பது தங்க நகைகளாக வேண்டியதில்லை என்பவர்களுக்கு ஏற்ற முதலீட்டு வழிமுறையாகும். இதில் முதலீடு செய்வதற்கான ஒரு மெய்நிகர் வழி, நீங்கள் ஆன்லைன் பணம் அல்லது UPI மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். மேலும் விற்பனையாளர்கள் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் இன்வாய்ஸை உங்களுக்கு வழங்குவார். நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் நிறுவனமானது, அந்த தங்கத்தை அதன் பாதுகாப்பான முறையில் சேமிக்க வழி செய்கிறது.

Also see... தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது அதிகரிக்கும்? விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது..

டிஜிட்டல் தங்க முதலீட்டை 1 ரூபாய் இருந்து நீங்கள் தொடங்கலாம். உங்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் தங்கத்தை விற்கவும் வாங்கவும் செய்யலாம். பெரும்பாலான தளங்களில் டிஜிட்டல் தங்க முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Gold, Investment