Home /News /business /

உங்களுக்கு வீடு வாங்கும் திட்டம் இருக்கிறதா.? 3 முக்கிய டிப்ஸ்கள் இங்கே.!

உங்களுக்கு வீடு வாங்கும் திட்டம் இருக்கிறதா.? 3 முக்கிய டிப்ஸ்கள் இங்கே.!

மாதிரி படம்

மாதிரி படம்

Investment Tips | சோஷியல் மீடியாவில் வீடு வாங்க நினைப்பவர்கள் ரியல் எஸ்டேட் டீலில் செய்ய வேண்டிய சில டிப்ஸ்கள் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உழைக்கும் மக்களின் முக்கியமான கனவு வாழ்நாளுக்குள் குறைந்தப்பட்சம் ஒரு வீடாவது வாங்கிவிட வேண்டும் என்பதாக இருக்கிறது. எனவே கஷ்டப்பட்டு உழைக்கும் காசை வைத்து மேற்கொண்டு கடன் வாங்கியாவது தங்களது கனவை பலரும் நிறைவேறி கொள்கிறார்கள்.

ஆனால் கனவை நிறைவேற்றி கொண்ட பிறகு பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு ஏன் தான் வீடு கட்டினோமோ அல்லது வாங்கினோமோ என்று பலரும் தங்களை நொந்து கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உரிய முன்யோசனையின்றி பணத்தை நிர்வகிப்பதே. நீங்கள் வீடு வாங்கும் திட்டத்தில் இருந்தால் நிதியை எப்படி நிர்வகிப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால் இன்வெஸ்ட்மென்ட் இன்ஃப்ளூயன்ஸர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா கூறி இருக்கும் டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சமீபத்தில் தனது சோஷியல் மீடியாவில் வீடு வாங்க நினைப்பவர்கள் ரியல் எஸ்டேட் டீலில் செய்ய வேண்டிய சில டிப்ஸ்களை ஷேர் செய்து கொண்டார். ஹோம் லோன் எடுத்து ஒரு வீட்டை வாங்கி EMI கட்டுவது தற்போது பொதுவான விஷயமாக இருந்தாலும், இதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது EMI ஸ்கீம்கள் உங்களின் மற்ற செலவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் இவர்.தனது சொந்த அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ள ஸ்ரீவஸ்தவா 3 வெவ்வேறு மாநிலங்களில் 3 ப்ராப்பர்ட்டிக்களை வாங்கிய போது தான் EMI-க்களை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை பற்றி உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவரின் முதல் மற்றும் முக்கிய டிப்ஸ் ஹவுசிங் லோன் EMI என்பது ஒருவர் செலுத்திய வாடகையை விட குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் லோன் EMI-ல், தாங்கள் செலுத்தும் அல்லது செலுத்தி வந்த வாடகையை விட 2.5 மடங்கு அதிக பணம் கட்டுகிறார்கள் என குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : பணக்காரர்கள் கடைபிடிக்கும் 50-30-20 விதி.. இதை செய்தால் நீங்களும் பணக்காரர் தான்.!

வாடகையை விட EMI-ஐ குறைவாக கட்டுபவர்களை காண்பது அரிதாக இருப்பதாக கூறி இருக்கிறார். தனது சொந்த அனுபவம் பற்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீவஸ்தவா 3 வெவ்வேறு மாநிலங்களில் 3 சொத்துக்களை வாங்கிய போது தான் EMI-க்களை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை பற்றி உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவரின் முதல் மற்றும் முக்கிய டிப்ஸ் ஹவுசிங் லோன் EMI என்பது ஒருவர் செலுத்திய வாடகையை விட சற்று குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும். 

ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் லோன் EMI-ல், தாங்கள் அல்லது செலுத்தி வந்த அல்லது பெறப்போகும் வாடகையை விட 2.5 மடங்கு அதிக பணம் கட்டுகிறார்கள் என குறிப்பிட்டு உள்ளார். செலுத்தும் அல்லது பெறப்போகும் வாடகையை விட EMI-ஐ குறைவாக கட்டுபவர்களை காண்பது அரிதாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

Also Read : தொடர்ந்து அதிகரித்து வரும் புதிய வீடுகளின் விலைகள் - வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இதற்கு உதாரணமாக ஒருவர் ரூ.1 கோடிக்கு வாங்கிய சொத்துக்கு மாதம் ரூ.80,000 EMI கட்டுகிறார் என்று வைத்து கொள்வோம். ஆனால் இதற்கு முன் அவர் அதிகபட்சம் ரூ.25,000 - ரூ.30,000 வாடகை செலுத்தி இருப்பார் அல்லது வாங்கிய சொத்தை ரூ.80,000-க்கும் குறைவான தொகைக்கே வாடகைக்கு விட முடிகிறது என்றால் நிதி சுமையை ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல் போகலாம் என்கிறார். இரண்டாவது டிப்ஸாக குடும்ப வருமானத்தில் 3 மடங்குக்கு மேல் வாங்கும் சொத்து மதிப்பு இருப்பது தேவையற்றது என்கிறார். உதாரணத்திற்கு ஓராண்டிற்கு உங்கள் குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ.20 லட்சம் என்றால், வாங்கும் சொத்தின் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.மூன்றாவதாக 40% முன்பணம் செலுத்தி வாங்க கூடிய டெபாசிட் உங்களிடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ஸ்ரீவஸ்தவா. அப்படி இல்லை என்றால் குறிப்பிட்ட சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்க அறிவுறுத்துகிறார். மொத்தத் தொகையில் 40% ஒருவர் முன்பணம் செலுத்த முடியாவிட்டால், நீங்கள் அதை வாங்க வேண்டாம் என்கிறார்.
Published by:Selvi M
First published:

Tags: EMI, Home Loan

அடுத்த செய்தி