ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீபாவளிக்கு கார் வாங்க திட்டமா.? எலெக்ட்ரிக் கார் வாங்கினால் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெறலாம்.!

தீபாவளிக்கு கார் வாங்க திட்டமா.? எலெக்ட்ரிக் கார் வாங்கினால் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெறலாம்.!

எலெக்ட்ரிக் கார் வங்கிக் கடன்

எலெக்ட்ரிக் கார் வங்கிக் கடன்

EV Car Loans | எலெக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 30 பேசிஸ் பாயிண்ட்ஸ் வரையிலும் வங்கிகள் சார்பில் சலுகை அளிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தாலும், அதற்கென எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுத்திருக்க மாட்டீர்கள். ஆனால், தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்து, கார் வாங்கிவிட வேண்டும் என்று முனைப்போடு நீங்கள் செயல்பட தொடங்கியிருப்பீர்கள்.

கார் வாங்குவதற்கு முழுமையான பணம் நம்மிடம் இல்லாத சூழலில், வங்கிகளில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு கார் லோன்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு வங்கிகள் சிறப்பான சலுகைகளுடன் கடன் வழங்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன.

எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏன் இவ்வளவு சலுகைகள் :

புதைவடிவ எரிபொருள்களின் மூல ஆதாரங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன என்பதும், இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்பதும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த மாசுபாடு ஏற்படுகின்றது.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதைப் போல, மத்திய அரசு சார்பிலும் வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற காரணங்களால் முதல்முறை கார் வாங்க நினைப்பவர்களின் விருப்பத்திற்கு உரிய தேர்வாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. ஏற்கனவே கார்களை வைத்திருப்பவர்களும் கூட, அடுத்தமுறை கார் வாங்கும்போது அது எலெக்ட்ரிக் வாகனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

நியாயமான விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள் :

எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமான புதிதில் அவற்றின் விலை மிகக் கூடுதலாக இருந்த காரணத்தால் வாடிக்கையாளர்கள் அதனை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். ஆனால், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி என அடுத்தடுத்து பல நிறுவனங்கள் சார்பில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், அவற்றின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வழங்கும் வங்கிகள் :

எலெக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 30 பேசிஸ் பாயிண்ட்ஸ் வரையிலும் வங்கிகள் சார்பில் சலுகை அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஃபேங்க் ஆஃப் பரோடா சார்பில் 0.25 பெர்சண்டேஜ் பாயிண்ட்ஸ் வரையிலும், எஸ்பிஐ சார்பில் 0.20 பெர்சண்டேஜ் பாயிண்ட்ஸ் வரையிலும் ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.

Also Read : புத்தாண்டுக்கு புது கார் வாங்க போறீங்களா - இதைப்படிங்க முதலில்!

எஸ்பிஐ வங்கியில் வழக்கமாக கார் லோன் என்பது 7.85 சதவீதம் முதல் 8.65 சதவீத வட்டி வரையிலும் வழங்கப்படும் நிலையில் பசுமை வாடிக்கையாளர்களுக்கு 7.95 சதவீதம் முதல் 8.30 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Diwali purchase, Electric car, Tamil News