Home /News /business /

தங்கம் வாங்கப் போகிறீர்களா.? - டிஜிட்டல் தங்கம் முதலீடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

தங்கம் வாங்கப் போகிறீர்களா.? - டிஜிட்டல் தங்கம் முதலீடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

தங்கம்

தங்கம்

Digital Gold Investment | இந்தப் பண்டிகை காலத்தில் நீங்கள் தங்க முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த நாலு வகையான முதலீடுகளில் இருந்து தேர்வு செய்யலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வங்கி கணக்கில் சேமிப்பது முதல் மாதா மாதம் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாக செலுத்துவது வரை பலவிதமான முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. பெரிய தொகையை முதலீடு செய்ய முடியவில்லை ஆனால் முதலீடு என்றுமே நஷ்டம் கொடுக்காது என்பதில் தங்கம் மற்றும் நிலம், இந்த இரண்டுமே முதல் இடங்களில் இருக்கின்றன.

தங்க நகை என்பது அலங்காரம், ஆபரணம், அழகு என்பதை கடந்து ஒரு பாதுகாப்பான முதலீடாகத்தான் இன்றுவரை கருதப்பட்டு வருகிறது. மாதமாதம் சேமிப்பது முதல் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து கணிசமான தொகை கொடுத்து பண்டிகை காலங்களில் தங்கம் வாங்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனவே இப்பொழுது நகை வாங்குவது மட்டுமல்லாமல் டிஜிட்டல் வடிவிலும் தங்கத்தை பல்வேறு விதமாக முதலீடு செய்யலாம். இந்தப் பண்டிகை காலத்தில் நீங்கள் தங்க முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த நாலு வகையான முதலீடுகளில் இருந்து தேர்வு செய்யலாம்.

நகைக்கு மாற்றாக டிஜிட்டல் தங்கம்

அடுத்தடுத்து நவராத்திரி, தீபாவளி என்று இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகள் அணிவகுத்து நிற்பதால், இந்தக் காலத்தில் தங்க நகைகள், தங்க நாணயங்கள் என்று தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் வாங்குவது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி நேரத்தில் போனஸ் கிடைக்கும்; அதில் ஒரு தொகையை தங்கம் வாங்குவது பல வீட்டிலும் பழக்கத்தில் இருக்கிறது. தங்க நகை வாங்க வேண்டிய தேவை இல்லை என்றால், தங்கத்தை முதலீடாக டிஜிட்டல் முறையில் வாங்கி சேமித்து வைக்கலாம்.

தற்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கும் மற்றும் உங்களுக்கு கணிசமான லாபம் பெற்றுத்தரும் டிஜிட்டல் தங்க முதலீடு விருப்பங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.



சவரன் தங்கப்பத்தரம்:

சமீபத்தில் முதலீட்டுச் சந்தையில் அதிக கவனம் ஈர்த்துள்ள தங்க முதலீடுதான் சவரன் தங்கப் பத்திரம். சவரன் தங்கப் பத்திரம் என்பது ரிசர்வ் வங்கி வழங்கும் முதலீட்டு திட்டம். நாம் எவ்வாறு கிராமங்களில் தங்க நகை வாங்குகிறோமோ, அது போலவே இதிலும் கிராம் கணக்கில் முதலீடு செய்யலாம். தங்க நகை, நாணயம் அல்லது தங்க கட்டிகளுக்கு மாற்றாக இது உங்களுக்கு ஒரு பத்திரமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை முதிர்வு காலத்துடன் சவரன் தங்கப் பத்திரம் வழங்கப்படுகிறது. மேலும், மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.  நீங்கள் முதலீடு செய்யும் தங்கத்தின் ஒருகிராம் விலை ₹5000 என்றால், நீங்கள் ₹5000 கொடுத்து ஒரு கிராம் அளவுக்கு தங்கப் பத்திரம் வாங்கினால் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிராம் தங்கம் ₹10,000 இருந்தது என்றால் உங்களுக்கு 10,000 மற்றும், ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டி சேர்த்து முதிர்வுத் தொகை கிடைக்கும்.

இது நீண்ட கால முதலீட்டு திட்டமாக மட்டுமே பொருந்தும்.

Also Read : டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

தங்க நிதி (கோல்டு ETF)

கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் என்பது நம் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பது போன்ற முதலீடாகும். அதாவது, நீங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது போல தங்கத்தையும் வாங்கி விற்கலாம். நீங்கள் எவ்வளவு தொகைக்கு தங்கம் வாங்கறீங்களோ அந்த மதிப்பிற்கான பத்திரம் உங்களுக்கு எலெக்ட்ரானிக் வடிவத்தில் உங்களுடைய டீமேட் கணக்கில் கொடுக்கப்படும். டே-டிரேடிங் என்பது போல தினசரி தங்கம் வாங்கி விற்கலாம் அல்லது தங்கம் வாங்கி விலை ஏறும் பொழுது அதனை விற்று லாபம் சம்பாதிக்கலாம். குறுகிய கால முதலீட்டிற்கு தங்க நிதியில் முதலீடு செய்யலாம்.



தங்கம் பரஸ்பர நிதி

மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை என்னால் சேமிக்க முடியும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்று கூறப்படும் பரஸ்பர நிதி தான். டீமேட் கணக்கு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மற்றும் சேமிப்பை மேற்கொள்ளலாம். தங்க முதலீடுக்காகவே, பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன.

Also Read : பென்ஷன் திட்டத்தில் புதிய பாலிசியை அறிமுகம் செய்த எல்ஐசி - முழு விவரம்

கோல்ட் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்

இந்த தங்க முதலீடு என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஒரு தொகுப்பு ஆகும். இதன் பெயரில் இருப்பது போல, பல விதமான தங்க முதலீட்டு திட்டங்களில் தங்கம் முதலீடு செய்யப்படும். உதாரணமாக, தங்க சுரங்க நிறுவனத்தின் பங்குகள் முதல் தங்கக் கட்டிகள், நாயனங்கள் வரை.
Published by:Selvi M
First published:

Tags: Gold, Investment

அடுத்த செய்தி