இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமான படையில் ஓய்வூதிய செலவினத்தை குறைக்கவே மத்திய அரசு குறுகிய கால திட்டமான அக்னிபத்தை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு துறைகளில் ஓயவூதியத்திற்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை இப்போது காணலாம்.
ஆண்டு தோறும் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டின் 50 சதவீத நிதி, ராணுவம் கடற்படை மற்றும் விமான படையில் ஓய்வூதிற்காகவே செலவிடப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வெறும் 5 சதவீத நிதியே ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 70 சதவீத நிதி இயக்க செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீத தொகைதான் முப்படைகளை நவீனப்படுத்தவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
2022- 23- ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் கல்வி இயக்க செலவுகளை விட, ஓய்வூதியத்திற்கு அதிக அளவில் செலவிடப்பட்டது. மத்திய அரசு பணி செய்து ஓய்வு பெறுபவர்களில் முப்படையை சேர்ந்தவர்கள் 50 சதவீதமாகவும், ரயில்வே துறையை விட இரு மடங்கு அதிகமானவர்களாகவும் உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளில் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் அதிகரித்துள்ளது.
gold scheme: தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.. முழு விவரம் இதோ!
2023 நிதியாண்டுக்கான பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான செலவினங்களுடன் ஒப்பிடுகையில், கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்ட வருவாய், செலவினங்களை விட அதிகமாக உள்ளது. அதாவது பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு 0.5 லட்சம் கோடியாக உள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான செலவு 0.80 லட்சம் கோடியாகவும் கல்வித்துறைக்கான பட்ஜெட் 1 . 04 லட்சம் கோடியாகவும் உள்ளது. இவற்றை விட ராணுவத்தினர் பெறும் ஓய்வூதிய செலவு அதிகமாக அதாவது 1 .19 லட்சம் கோடியாக உள்ளது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கிராமப்புற மேம்பாடு, உள்துறை ஆகியவற்றின் பட்ஜெட் மட்டுமே ராணுவ ஓய்வூதிய செலவை விட அதிகமாக உள்ளது.
மேலும் தபால் மற்றும் ரயில்வே துறை ஊழியர்களை விட ராணுவ ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தபால்துறை ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 3 . 2% ஆகவே நீடிக்கிறது. ரயில்வே பொறுத்தவரை ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 1 .7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் ராணுவத்திலோ ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் அதிகரித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
பெண்கள் & குழந்தைகள் மேம்பாடு | - ரூ. 0.25 லட்சம் கோடி |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் | - ரூ. 0.8 லட்சம் கோடி |
கல்வித்துறை | - ரூ.1.04 லட்சம் கோடி |
ராணுவத்தினருக்கான ஓய்வூதிய செலவு | - ரூ. 1.19 லட்சம் கோடி |
வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் | - ரூ.1.32 லட்சம் கோடி |
கிராமப்புற மேம்பாடு | - ரூ.1.38 லட்சம் கோடி |
உள்துறை | - ரூ.1.69 லட்சம் கோடி |
ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை (2014-2021)
தபால் துறை - 3.2%
ரயில்வே - 13.8 - 15.5%
ராணுவம் - 24.1 - 34. 1% சதவீதமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pension Plan, Retirement