அழிவின் விளிம்பில் கறிக்கோழி உற்பத்தி: கவலையில் பண்ணையாளர்கள்!!

News18 Tamil
Updated: June 9, 2019, 11:13 AM IST
அழிவின் விளிம்பில் கறிக்கோழி உற்பத்தி: கவலையில் பண்ணையாளர்கள்!!
கறிக்கோழி
News18 Tamil
Updated: June 9, 2019, 11:13 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பல்வேறு காரணிகளால் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது முட்டையும் கறிக்கோழியும்தான். அந்த அளவிற்கு நாமக்கல்லில் இருந்து தினந்தோறும் பல லட்சம் முட்டைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தொழில் தற்போது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முட்டைக்கோழி, கறிக்கோழி என்று இரண்டு வகையான பிராய்லர் கோழிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கறிக்கோழி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு பண்ணையாளர்கள் மூலப்பொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

 

சிறு பண்ணையாளர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகளும் முன்வருவதில்லை. மேலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கறிக்கோழி இறக்குமதி செய்யப்படுவதால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் பண்ணையாளர்கள்.

 

எனவே இந்த தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
First published: June 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...