புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து 3,729 ரூபாய்க்கும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29,832 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 3, 2019, 10:37 PM IST
  • Share this:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29,832 ரூபாய்க்கு விற்பனையானது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததன் எதிரொலியாக பங்கு சந்தைகளும் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர், ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து 3,729 ரூபாய்க்கும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29,832 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 38,860 ரூபாய்க்கும் விற்பனையாகியது.

வெள்ளியின் விலையும் கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து 52 ரூபாய் 60 காசுகளும், கிலோ 52 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Also Watch
First published: September 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்