முகப்பு /செய்தி /வணிகம் / இனி ஈஸியா பணம் அனுப்பலாம்.. வெளிநாடுகளிலும் வந்தது போன் பே..

இனி ஈஸியா பணம் அனுப்பலாம்.. வெளிநாடுகளிலும் வந்தது போன் பே..

போன் பே செயலி

போன் பே செயலி

போன் பே செயலி மூலம் இனி வெளிநாடுகளிலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்கே உள்ள கடைகளில் போன் பே செயலி மூலம் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணப் பரிமாற்ற செயலிகளில் முதல் முறையாக போன் பே செயலியில் இந்த வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செயலியை பயன்படுத்துவோர், தங்களின் வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளிலும் பயன்படுத்தும் வகையில் செயலில் வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் பயன்படுத்தும் போது, அந்த நாட்டின் பணமதிப்புக்கு ஏற்ப இந்திய ரூபாய் மதிப்பில் பணம் பிடித்தம் செய்யப்படும் என போன் பே தெரிவித்துள்ளது.

வரும் காலத்தில் இன்னும் பல நாடுகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என போன் பே இணை நிறுவனர் ராகுல் சாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்பட இந்தியர்கள் பெரும்பாலானோர் இந்த நாடுகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் எளிமையாக பணம் அனுப்ப இனி போன் பே ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.

First published:

Tags: Phonepe, UPI