• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Bharat Pe மீதான வழக்கை திரும்பப்பெற்றது Phone Pe - புதிய வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு!

Bharat Pe மீதான வழக்கை திரும்பப்பெற்றது Phone Pe - புதிய வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

அடுத்த விசாரணையின்போது புதிய வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாக போன்பே விளக்கம் அளித்தது.

  • Share this:
பாரத்பே செயலி Pe வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிராக தடைகோரி தொடரப்பட்ட வழக்கை PhonePe திரும்பப்பெற்றுள்ளது.

ப்ளிப்கார்ட்டுக்கு சொந்தமான போன்பே (phonepe) நிறுவனமும், பார்த் பே (Bharat Pe) நிறுவனமும் 'pe' வார்த்தையை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் போக்கு 2018 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் இரு நிறுவனங்களும் நீதிமன்றங்களுக்கு சென்றன.

வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட்டின் கீழ் இயங்கி வரும் போன்பே பேமண்ட் செயலி, இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பாரத்பே டெல்லியை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது. இவ்விரு நிறுவனங்களுக்கும் என்ன பிரச்சனை என்றால், 'Pe' என்ற வார்த்தைக்கு வணிக ரீதியாக காப்புரிமை பெற்றுவிட்டதாக போன்பே கூறுகிறது. டிஜிட்டல், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என கூறும் போன்பே, பாரத்பே அறிமுகப்படுத்தியிருக்கும் Buy now Pay later (BNPL) புரோடக்டான PostPe-வில் இருந்தும் Pe வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என கோரிவருகிறது.

இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை நீதிமன்றங்களில் போன்பே நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணக்கு வந்தபோதும், தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக புதிய வழக்கை தாக்கல் செய்யப்போவதாகவும் போன்பே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், போஸ்பே தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி வந்தபோதும், PostPe-வில் பே வார்த்தையை பயன்படுத்த தடைக்கோரி தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெறுவதாக தெரிவித்தது.

Also read... பர்சனல் லோன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்த விசாரணையின்போது புதிய வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாக போன்பே விளக்கம் அளித்தது. இது குறித்து போன்பே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், " pe என்ற வார்த்தையை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கான அனைத்து காப்புரிமைகளும் தங்களிடம் மட்டுமே இருக்கிறது. இதனை பாரத்பே நிறுவனம் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இந்த வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

பாரத்பே தரப்பில் பேசிய அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், Pe வார்த்தை தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார். அதேநேரத்தில் சட்டரீதியாக போராடி, Pe வார்த்தையை பயன்படுத்துவதற்கான தார்மீக உரிமையை நிலைநாட்டுவோம் என விளக்கமளித்துள்ளார். போன்பே பேமண்ட் செயலியை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும், பாரத்பே செயலியை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்களும் பயன்படுத்தி வருகின்றனர். போன்பே-வின் மாதாந்திர பரிவர்த்தனையின் மதிப்பு 100 கோடி டாலர் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: