ஹோம் /நியூஸ் /வணிகம் /

உலக அளவில் ஃபோன் விற்பனையில் மீண்டும் சரிவு.! ஆனால் தொடர்ந்து லாபம் ஈட்டும் ஆப்பிள் நிறுவனம்

உலக அளவில் ஃபோன் விற்பனையில் மீண்டும் சரிவு.! ஆனால் தொடர்ந்து லாபம் ஈட்டும் ஆப்பிள் நிறுவனம்

ஐபோன்

ஐபோன்

உலகளவில் மொபைல் போன்களின் விற்பனை சரிந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவர தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இன்று அனைவரது கையிலும் தவழும் ஒன்றாக இருந்து வருகின்றன மொபைல் போன்கள். சர்வதேச அளவில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் உலகளவில் மொபைல் போன்களின் விற்பனை சரிந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவர தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. உலகளாவிய ஹேண்ட்செட் மார்க்கெட் விற்பனை இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது.

  ஜூன் காலாண்டில் 2 சதவீதம் (year-on-year) மற்றும் 15 சதவீதம் (காலாண்டில்) 95.8 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. எனினும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிக லாபம் ஈட்டி வருகிறது.

  சமீபத்திய Counterpoint Smartphone Camera Tracker கூறியுள்ள தகவலின்படி H1 2022-ல் உலகளாவிய ஸ்மார்ட்போன் CMOS இமேஜ் சென்சார் (CIS) ஏற்றுமதிகள் 14% ஆண்டு குறைந்து சுமார் 2.4 பில்லியன் யூனிட்களாக உள்ளது. இதற்கு மந்தமான ஸ்மார்ட் ஃபோன் ஏற்றுமதி மற்றும் மல்டி-கேமரா டிரெண்டின் மந்தநிலை காரணமாக குறிப்பிடப்படுகிறது.

  இதனிடையே Counterpoint Research-ன் சமீபத்திய புள்ளிவிவரப்படி சீனாவில் அவ்வப்போது போடப்பட்ட லாக்டவுன்கள் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை காரணமாக உலகளாவிய ஹேண்ட்செட் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த 2 காரணிகள் ஒட்டுமொத்த ஏற்றுமதியை பாதித்தன. இதே காலகட்டத்தில் சராசரி விற்பனை விலை (ASP - Average selling price) 6 சதவீதம் அதிகரித்த போதிலும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.

  இதனிடையே மூத்த ஆய்வாளர் ஹர்மீத் சிங் வாலியா கூறுகையில், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற உலகளாவிய பிராண்டுகள் ஒட்டுமொத்த ASP வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன மற்றும் சில சீன பிராண்டுகள் கூட கடந்த ஆண்டில் அதிக ASP மாற்றத்தை நோக்கி செயல்படுவதால், ஒட்டுமொத்த இயக்க லாபம் (overall operating profit) ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வருடாந்திர வளர்ச்சியை கண்டுள்ளது என்றார்.

  Read More: வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

  எனினும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் QoQ 26 சதவீதம் குறைந்த பிறகு இயக்க லாபம் (operating profits) 29 சதவீதம் குறைந்தது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

  இந்த காலாண்டில் 46.5 மில்லியன் ஐபோன்களை அனுப்பியுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (year-over-year) 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

  ஒப்பீட்டளவில் பொருளாதார சரிவிலிருந்து மீளும் வகையில் ஐபோன் சுழற்சி முறையில் அறிமுகம் செய்யப்படுவதால் முதல் பாதியுடன் ஒப்பிடும் போது, இரண்டாம் பாதியில் வருவாய் வளர்ச்சி மற்றும் அதிக லாபம் கிட்டத்தட்ட உறுதியானது என்று Counterpoint Research-ன் இணை இயக்குனர் ஜான் ஸ்ட்ரைஜாக் கூறி இருக்கிறார்.

  புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்து காணப்படும் பணவீக்க அளவுகள் காரணமாக ஹேண்ட்செட் மார்க்கெட் தொற்றுநோய்க்கு முந்தைய இல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Apple, Apple iphone, Smartphone