ஹோம் /நியூஸ் /வணிகம் /

மொபைல் பே ஆப்-க்கு இடைக்கால தடை... போன் பே தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

மொபைல் பே ஆப்-க்கு இடைக்கால தடை... போன் பே தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

மொபைல் பே-க்கு இடைக்கால தடை

மொபைல் பே-க்கு இடைக்கால தடை

மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வர்த்தக சின்னம் பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது. அந்த மனுவில், மொபைல் பே செயலியின் லோகோ, ஃபோன் பே செயலியின் லோகோ போல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Published by:Murugesh M
First published:

Tags: Chennai High court, Phonepe, UPI