ஹோம் /நியூஸ் /வணிகம் /

1.3 பில்லியன் யூரோ நஷ்டம்...நிதி நெருக்கடியால் 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிலிப்ஸ்!

1.3 பில்லியன் யூரோ நஷ்டம்...நிதி நெருக்கடியால் 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிலிப்ஸ்!

நிதி நெருக்கடியால் 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிலிப்ஸ்

நிதி நெருக்கடியால் 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிலிப்ஸ்

வேலை இழப்புகள் முக்கியமாக அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும் என்று அவர் கூறினார். இதன் காரணமாக வர்த்தகத்தில் பிலிப்ஸ் பங்குகள் 0.75 சதவீதம் சரிந்தன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

டச்சு மருத்துவ சாதன உற்பத்தியாளர் பிலிப்ஸ் திங்களன்று நிதி நெருக்கடியால் தனது 5% பணியாளர்களான 4,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லைட்டிங் நிறுவனமாகத் தொடங்கியது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக தொலைநிலை சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வந்தது.

இந்நிலையில் ஜூன் 2021 இல் பிலிப்ஸின் சில சுவாசக் கருவிகளில் நுரை சிதைவது கண்டறியப்பட்டது. இது பயனர்களின் சுவாச கோளாறை மேலும் அதிகரிப்பதோடு நச்சு மற்றும் புற்றுநோய் விளைவுகள் ஏற்படுத்தும் சாத்தியங்களும் தெரிந்தது. உடனே அந்தக் கருவிகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது

அதோடு நான்கு மில்லியன் மாற்று சாதனங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இதனால் சுமார் 1.3-பில்லியன் யூரோ ($1.28 பில்லியன்) மதிப்பிலான பெரும் நஷ்டத்தில் நிறுவனம் உள்ளது. அதுமட்டுமன்றி பிலிப்ஸ் இப்போது அமெரிக்க நீதித் துறை விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள்.. இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம்? - அரசிடம் பதில் கேட்கும் டெல்லி உயர்நீதிமன்றம்!

அதோடு, செயல்பாட்டு மற்றும் விநியோக சவால்கள், பணவீக்க அழுத்தங்கள், சீனாவில் கோவிட் நிலைமை மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக இந்நிறுவனத்தின் வணிகம் பெரிதும் பாதித்தது.

இதனால் தற்போது உலக அளவில் கிட்டத்தட்ட 80,000 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் தனது நிகர ஊழியர்களில் 5% நபர்களை வேலையை விட்டு விலக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

"நாங்கள் பல சவால்களை எதிர்கொள்கிறோம். நிறுவனம் செலவுகளைக் குறைக்க "உடனடி நடவடிக்கைகளை" எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். உலகளாவிய ரீதியில் சுமார் 4,000 பணியாளர்களை உடனடியாகக் குறைப்பது கடினமான செயல் என்றாலும் இன்றைய சூழலுக்கு இது அவசியமான முடிவு” என்று இந்த மாத தொடக்கத்தில் பொறுப்பேற்ற பிலிப்ஸின் புதிய தலைமை நிர்வாகி ராய் ஜேக்கப்ஸ் கூறினார்.

காற்று மாசுவால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே நுரையீரல் பாதிப்பு அதிகம் - ஆய்வு

வேலை இழப்புகள் முக்கியமாக அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும் என்று அவர் கூறினார். இதன் காரணமாக வர்த்தகத்தில் பிலிப்ஸ் பங்குகள் 0.75 சதவீதம் சரிந்தன.

"பிலிப்ஸின் லாபகரமான வளர்ச்சி திறனை கொண்டு வரவும், எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் சந்தையில் ஒரு மதிப்பை உருவாக்கவும் நிறுவனத்தைத் திருப்புவதற்கு இந்த நடவடிக்கைகள் தேவை" என்று ஜேக்கப்ஸ் கூறியுள்ளார்.

நிறுவனம் கடந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் மூன்று பில்லியன் யூரோக்களின் நிகர லாபத்தை பதிவு செய்தது, ஆனால் அது அதன் உள்நாட்டு உபகரண வணிகத்தின் விற்பனையிலிருந்து கிடைத்தது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Business, Financial crisis, Loss