இந்திய பெனிசிலின் உற்பத்தி ஆலைகள் மூடல்; 1,700 நபர்கள் வேலையை இழக்கும் அபாயம்!

தமிழ் நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஆலைகளில் 1,700 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

news18
Updated: January 10, 2019, 1:43 PM IST
இந்திய பெனிசிலின் உற்பத்தி ஆலைகள் மூடல்; 1,700 நபர்கள் வேலையை இழக்கும் அபாயம்!
பிஃபிசர்
news18
Updated: January 10, 2019, 1:43 PM IST
அமெரிக்கப் பார்மா நிறுவனமான பிஃபிசருக்கு இந்தியாவில் தமிழ் நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. சர்க்கரை நோயுக்கான பெனிசிலின் போன்ற மருந்துகளுக்கு உலகப் புகழ் பெற்ற நிறுவனம் பிஃபிசர்.

ஆனால் அன்மை காலமாக இந்த மருந்துக்கான தேவைகள் குறைந்துள்ளதால் இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளை முட உள்ளதாகப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பிஃபிசர் நிறுவனத்திற்குத் தமிழ் நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஆலைகளில் 1,700 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவீதம்.

நீண்ட காலமாகவே பெனிசிலின் மருந்துக்களான தேவைக் குறைந்து வருவதால் தொடர்ந்து நட்டம் அடைந்து வருகிறோம். இதே நிலை தொடர்வது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது. எனவே நிறுவனத்தின் 2 ஆலைகளை மூட உள்ளோம் என்று பிஃப்சர் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஆலையில் பொதுவான செபலோஸ்போரின் இஞ்சக்‌ஷன், பெனெம்ஸ் மற்றும் பென்சிலின் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. சென்னை ஆலைக்குத் தேவையான சில பொருட்களை மகாராஷ்டிரா ஆலையில் இருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

இரண்டு ஆலையிலும் இந்திய சந்தைக்கான மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை. விஷாகபட்டிணத்தில் தங்களது நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளப்பட்ட வருகிறோம் என்றும் பிஃபிசர் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்?
Loading...
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...