முகப்பு /செய்தி /வணிகம் / Employees' Provident Fund: பிஎஃப் பணம் பெறுவதில் புதிய முறை - வேலையிழந்தவர்கள் அட்வான்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்?

Employees' Provident Fund: பிஎஃப் பணம் பெறுவதில் புதிய முறை - வேலையிழந்தவர்கள் அட்வான்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்?

மாதிரி படம்

மாதிரி படம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பாக ரூ.15,000க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கு இது பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் கணக்கு வைத்திருப்போர் ஒரு மாதம் வரை வேலையில்லாமல் இருந்தால், கணக்கில் உள்ள மொத்த தொகையில் 75 சதவிகிதத்தை முன் பணமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் பணியாளர்கள் யாரும் ஒரு மாதத்துக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவர்கள் தங்களது பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 75 சதவிகிதம் வரை முன்பணமாக பெறலாம் என அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது வேலையில்லாமல் பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள தொழிலாளர்களுக்கு இது பெரிதும் கைகொடுக்கும் எனவும், தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் கணக்கை முடிக்காமல் தொடர்ந்து செயல்பட வழி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பாக ரூ.15,000க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கு இது பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஃப்ஓ அல்லது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் பிற தகவல்கள்

1. ஒருவேளை கடைசியாக வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது இன்னும் முடிவடையவில்லை என்றால், நீங்கள் சேவையை விட்டு விலகிய பிறகும் கொரோனா முன் பண வசதியை (Covid Advance Facility) பயன்படுத்திக்கொள்ளலாம்.

2 .பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருவேளை கொரோனா போன்ற நோய்களால் இறந்து விட்டால் அவர்களது குடும்பத்தினர் சுமார் ரூ.7 லட்சம் Employee's deposit linked Insurance Scheme (EDLI) மூலம் பெறலாம். முன்னதாக இது ரூ.6 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read... ரூ.5 லட்சம் முதலீடு, மாத வருமானம் ரூ.10,000 ; SBI-ன் சூப்பர் பிளான்

3. ESIC திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், கொரோனாவின் காரணமாக இறந்த ஊழியர்களைச் சார்ந்தவர்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் குறிப்பிடத்தக்க சமூக பாதுகாப்பு உதவிகளை வழங்குகிறது.

இதில் இரண்டு நன்மைகள் உள்ளன. கொரோனா காரணமாக சம்பளம் இழந்த ஒரு பணியாளருக்கு இழப்பீடு வழங்குவது.

2. மறைந்த தொழிலாளியின் இறுதி சடங்கிற்கு ஆகும் செலவை ஏற்பது.

கொரோனா காரணமாக வேலையிழந்த, சம்பளம் பாதியாக குறைக்கப்பட்ட பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலமாகவே, விண்ணப்பித்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற முறை சமீபத்தில் நடைமுறைக்கு வந்ததது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரு மாதத்துக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால் அவர்கள் https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php என்ற இணைய பக்கத்தின் மூலம் அதில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Epfo, PF