• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • PF பணம் எடுப்பது முதல் அக்கவுண்ட் மூடுவது வரை.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

PF பணம் எடுப்பது முதல் அக்கவுண்ட் மூடுவது வரை.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பிஎஃப்

பிஎஃப்

5 ஆண்டுகளைக் கடந்தால் வரி பிடித்தம் இருக்காது.

  • Share this:
    நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி இருக்கும்.

    சேமிப்புகளுக்கு வங்கிகள் கொடுக்கும் பணத்தை விட, பொது வருங்கால வைப்பு நிதியில் சேமிப்புகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதம் அதிகம். 1971 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்ட பி.பி.எப்பின் வட்டி விகிதம் இப்போது 7.1 விழுக்காடாக இருக்கிறது.

    முதலீட்டு தொகைகளுக்கு உத்திரவாதம் கொடுப்பதுடன், முதிர்ச்சி காலத்தில் கூடுதல் ரிட்டன்களை கொடுக்கும் திட்டமாகவும் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இதில், ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

    பொது வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டிக்கும் வட்டி கிடைக்கும் என்பதால், சேமிப்புக்கு கூடுதல் வருமானத்தை கொடுக்கும் பயனுள்ள திட்டமாகவும், பி.எப் இருக்கிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இந்தக் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்துக்கு முன்பே கூட குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்த கணக்கை மூடலாம்.

    PPF திரும்பப் பெறுவதற்கான விதிகள் :

    15 ஆண்டுகள் ஒருவர் பி.எப் கணக்கு வைத்திருந்தால், முதிர்வு காலத்தை எட்டியவுடன் அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிக் கிளைகளுக்கு சென்று படிவம் C -ஐ சமர்பித்து கணக்கை மூடிக்கொள்ளலாம். கணக்கை ஒருவர் தொடர விரும்பினால், பிஎப் பங்களிப்பு செய்யாமல் கூட தொடர்ந்து கணக்கை ஆக்டிவாக வைத்திருக்கவும் முடியும்.

    அவர் ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பி.எப் பங்களிப்பை அவர் செலுத்த விரும்பினால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தும் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிஎப் நீட்டிப்புக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், முதிர்வு காலத்துக்குப் பிறகு கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம்.

    முன்கூட்டியே பணம் எடுத்தல் :

    பிஎப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் 5 ஆண்களுக்குப் பிறகே பணம் எடுக்கத் தகுதியுடையவர். 2020 ஆம் ஆண்டு பிஎப் கணக்கு தொடங்கியிருந்தால், 2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணம் எடுக்க முடியும். ஆனால், அனைத்து தொகையையும் பி.எப்பில் இருந்து எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் வரி உள்ளிட்ட சில நிபந்தனைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். 5 ஆண்டுகளைக் கடந்தால் வரி பிடித்தம் இருக்காது.

    PPF கணக்கை முன்கூட்டியே மூடுவது :

    மருத்துவச் சூழ்நிலைகளுக்காக ஒருவர் முன்கூட்டியே பி.எப் கணக்கை மூடிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் பி.எப் செலுத்தி, அந்த நேரத்தில் பெற்றோர், குழந்தைகள், மனைவி உள்ளிட்டோர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆவணங்களை சமர்பித்து கணக்கை மூடிக்கொள்ளலாம். உயர்கல்வி படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் முன்கூட்டியே பி.எப் கணக்கை மூடி பணத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக 5 வருடத்தில் 7 லட்சம் சேர்க்கலாம்! அதற்கு செய்ய வேண்டியது இதுமட்டும் தான்!

    இதில் இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால், மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதங்களை விட ஒரு விழுக்காடு குறைவான வட்டி விகிதத்தில் மட்டுமே தொகை கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூடுபவர்களும், அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும், அவர்களுக்கு கிடைக்கும் வட்டி வருவாயும் மிக குறைவாக இருக்கும். ஆனால், நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற திட்டம் ஆகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: