Home /News /business /

கோவிட்-19 அட்வான்ஸ் - வைப்புநிதி கணக்கிலிருந்து மீண்டும் தொகை பெற அரசு அனுமதி அளிக்குமா?

கோவிட்-19 அட்வான்ஸ் - வைப்புநிதி கணக்கிலிருந்து மீண்டும் தொகை பெற அரசு அனுமதி அளிக்குமா?

பிஎஃப்

பிஎஃப்

கோவிட் தொற்று தனிநபரின் பொருளாதாரம் தொடங்கி, மாநிலம், நாடு மற்றும் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், பலருக்கும் நிதி நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, சம்பளம் வாங்கும் ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கில் இருந்து தங்களுக்குத் தேவையான தொகையை அட்வான்ஸ் தொகையாக வித்டிரா செய்யலாம் என்று அறிவித்திருந்தது. வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகையில் 75% வரை கணக்கு உரிமையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பெறலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. கோவிட் இரண்டாம் அலையின் போதும், இதே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கோவிட் மூன்றாம் அலை பாதிப்பு முழுவதுமாக நீங்காத நிலையில், மூன்றாவது முறையாக அரசு வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதி அளிக்குமா?

கோவிட் தொற்று தனிநபரின் பொருளாதாரம் தொடங்கி, மாநிலம், நாடு மற்றும் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை உலகில் காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். பலருக்கும் பணி நீக்கம், பாதி சம்பளம், நிறுவனங்களால் சரியாக சம்பளம் போடாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு நிதிச் சிக்கல்கள் ஏற்பட்டன. ஊழியர்களுக்கு ஓரளவுக்கு நிதிச்சுமையைக் குறைக்கும் முயற்சியில் அரசு அறிவித்த திட்டம் தான் கோவிட்-19 அட்வான்ஸ்.

கோவிட்-19 அட்வான்ஸ் என்பது PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள், தனது PF கணக்கில் இருக்கும் தொகையில் அதிகபட்சமாக 75% வரை கோவிட்-19 அட்வான்ஸ் என்று எடுத்துக்கொள்ளமால் என்று அனுமதி அளித்தது. வைப்புநிதி கணக்கில் இருக்கும் தொகையை நினைத்த போதெல்லாம் எடுக்க முடியாது. என்ன காரணங்களுக்கெல்லாம் கணக்கில் பணம் எடுக்கலாம் என்ற பட்டியல் உள்ளது. PF கணக்கில் இருந்து எடுக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

அதிகபட்ச தொகையாக, மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ தொகை அல்லது PF கணக்கில் இருக்கும் மொத்த இருப்பில் 75% தொகை, இந்த இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையை எடுத்துக் கொள்ளலாம். அதே போல, இந்த விதிகளுக்குட்பட்டு, ஊழியர்கள் தாங்கள் விரும்பும் குறைவான தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலருக்கும் உதவியாக இருந்தது.

மாதம் ரூ.15,000 க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 73 லட்சம் அட்வான்ஸ் கோரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், கிட்டத்தட்ட ரூ. 18,695 கோடி கிளைம் மேற்கொண்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

Also read... எஸ்பிஐ கிசான் கடன் அட்டை: குறைந்த வட்டியில் நான்கு லட்சம் வரை கடன் பெறுவது எப்படி

அதே போல, இரண்டாம் முறை கோவிட் அட்வான்ஸ் அறிவிக்கப்பட்ட போதும், 68 லட்சம் கிளைம்களுக்கு ரூ. 14,242 கோடி கிளைம் வழங்கப்பட்டது.

எதிர்பாராத மருத்துவ செலவு, பணி நீக்கம், சம்பளக்குறைவு என்று பிரச்சனைகளை எதிர்கொண்ட ஊழியர்கள் பலனடைந்தனர். தற்போது ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், அரசு மீண்டும் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: EPF

அடுத்த செய்தி