• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிஎஃப் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை எடுக்க விரும்புகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பிஎஃப் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை எடுக்க விரும்புகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

நீங்கள் PF-ஐ க்ளைம் செய்யும் போது ஆன்லனில் உங்கள் வங்கியின் செக் லீஃபை அப்லோட் செய்ய வேண்டும்.

  • Share this:
தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் எண்ணற்றோர் தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து அதாவது பிஎஃப் அக்கவுண்ட்டிலிருந்து (provident fund) பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா காரணமாக பலரது பொருளாதார நிலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே பல மாதங்கள் முடங்கியதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க லட்சக்கணக்கான தனியார் ஊழியர்களுக்கு கைகொடுத்தது பிஎஃப் பணம் தான். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO), ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) ஒழுங்குபடுத்துகிறது. சில நிதி தேவை சூழல்களை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்கள் EPF பணத்தை திரும்ப பெற்று கொள்வதற்கான விருப்பத்தையும் EPFO வழங்கி உள்ளது. உங்கள் பிஎஃப் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை பெற விரும்பினால் கட்டாயம் அதற்கான முக்கிய ரூல்ஸ்களை அறிந்திருப்பது அவசியம்.

EPF நிதியை திரும்ப பெறுவதற்கு தேவையானவை..

உங்களிடம் ஆக்ட்டிவாக இருக்கும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் UAN (Universal Account Number) இருக்க வேண்டும். மேலும் அந்த UAN-ஐ ஆக்டிவேட்டிங் செய்ய பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர் ஒர்கிங் கண்டிஷனில் இருத்தல் வேண்டும். UAN நம்பரில் ஆதார் எண், பான் எண் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற KYC விவரங்கள் இருக்க வேண்டும்.

பிஎஃப் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை திரும்ப பெற வரி விதிக்கப்படுமா?

உங்கள் பிஎஃப் அக்கவுண்ட் துவக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் நீங்கள் அந்த அக்கவுண்டிலிருக்கும் பண்ணத்தை எடுக்க விரும்பினால் அதற்கு வரி. அதுவே 5ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால், அதன் பிறகு உங்களது பிஎஃப் பணத்தை நீங்கள் திரும்ப எடுத்து கொள்வதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது. மெடிக்கல் எமெர்ஜென்சி, வேலையை விட்டு செல்வது போன்ற அவசர நோக்கங்களுக்காக பணம் எடுப்பதாக இருந்தாலும் கூட சில நேரங்களில் வரி விதிக்கப்படாது. இது தவிர உங்கள் பிஎஃப் அக்கவுண்ட்டில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் பிஎஃப் பணம்எதுவும் செலுத்தப்படாமல் இருந்தால், அதன் பிறகு நீங்கள் அந்த பணத்தை எடுக்கும் போது வரி விதிக்கப்படலாம்.

பிஎஃப்-லிருந்து பணமெடுப்பதற்கான கோரிக்கை எதனால் நிராகரிக்கப்படும் :

* EPFO போர்ட்டலில் உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை அப்டேட் செய்யாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் உங்கள் PF க்ளைம் ரிஜெக்ட் ஆகலாம்.

* நீங்கள் PF-ஐ க்ளைம் செய்யும் போது ஆன்லனில் உங்கள் வங்கியின் செக் லீஃபை அப்லோட் செய்ய வேண்டும். அதில் cancelled என்று குறுக்கே எழுதி அப்லோட் செய்ய வேண்டும். தெளிவற்ற முறையில் செக் லீஃப் அப்லோட் செய்தாலோ அல்லது முழுமையற்ற KYC விவரங்கள் இருந்தாலோ உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

Also read... ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்? உங்களை கோடீஸ்வரராக்கும் பி.எப்!

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்..

EPFO-ன் அதிகாரபூர்வ வெப்சைட்டான epfindia.gov.in-க்கு சென்று நீங்கள் PF advance-ஐ க்ளைம் செய்த பிறகு உங்களது கோரிக்கை உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். உங்கள் நிறுவனம் ஒப்புதல் அளித்ததிலிருந்து சுமார் 10 நாட்களுக்குள் அந்த தொகை உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் செலுத்தப்படும். முதலில் epfindia.gov.in வெப்சைட் சென்று online services ஆப்ஷனை தேர்வு செய்து, claim என்ற செக்ஷனுக்கு செல்ல வேண்டும்.

பின்னர் உங்கள் அக்கவுண்ட் நம்பரை சரிபார்த்து விட்டு, ஒரு செக் அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை அப்லோட் செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக நிதியை திரும்ப பெறுகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும். பின் ஆதார் அடிப்படையிலான OTP உருவாகி உங்களுக்கு அனுப்பபடும். அதனை டைப் செய்த பிறகு உங்கள் கோரிக்கை உங்கள் நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: