Home /News /business /

EPF சேமிப்பு மூலம் கோடீஸ்வரராகும் வாய்ப்பு - 1.5 கோடி சம்பாதிப்பது எப்படி?

EPF சேமிப்பு மூலம் கோடீஸ்வரராகும் வாய்ப்பு - 1.5 கோடி சம்பாதிப்பது எப்படி?

PF savings

PF savings

மாத ஊதியதாரராக பிடித்தம் செய்யப்படும் EPF வழியாகவே கோடீஸ்வரராக மாறலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
சேமிப்பு என்பது எக்காலத்துக்கும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால், எதில் சேமிக்கிறோம் என்பது முக்கியம். தற்போதைய காலகட்டத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்கள் விளம்பரங்களில் இடம்பெறுவதை பார்க்கிறோம். விளம்பரங்களில் ஈர்க்கப்படும் சில ஊதியதாரர்கள் பணத்துக்கு உத்தரவாதம் இல்லாத அல்லது சந்தை அபாயங்களுக்கு உட்பட்ட சில திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற்றத்தையும் சந்திக்கின்றனர். மாத ஊதியதாரராக பிடித்தம் செய்யப்படும் EPF வழியாகவே கோடீஸ்வரராக மாறலாம்.

உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா?. 25 ஆயிரம் ஊதியத்தில் வேலைக்கு செல்லும் ஒருவர் 12 விழுக்காடு பி.எப்-க்கு செலுத்த வேண்டும். சுமார் 35 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்து வந்தால் நிச்சயம் அப்போது 1.65 கோடி ரூபாய் உங்கள் கைகளில் இருக்கும். தற்போதைய நிதியாண்டியில் வங்கிகள் கொடுக்கும் சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 விழுக்காடு வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.

Also Read: பேஸ்புக்கை ஆட்டம் காண வைத்த டிக் டாக் செயலி – உலகளவில் புதிய சாதனை!

இந்த வட்டி விகிதம் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கும் வட்டியைவிட அதிகம். அதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வேலைக்கு சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் பணம் எடுத்தால் வருங்கால வைப்பு நிதிக்கு வரி உண்டு. 5 ஆண்டுகளைக் கடந்துவிட்டால் பி.எப் சேமிப்புக்கு வரி கிடையாது.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டால், பி.எப் தொகையை எடுக்காமல், அந்தப் பணத்தை அப்படியே புதுக்கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். 35 ஆண்டுகளில் இடையில் ஒரு முறை கூட இந்த தொகையில் இருந்து பணத்தை எடுக்கக்கூடாது. நீண்ட கால முதலீடு திட்டங்களில், நடைமுறையில் இருக்கும் மற்ற திட்டங்களைக் காட்டிலும் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மாத ஊதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பை அறிந்து கொள்ளதாத பலர், சிறந்த முதலீடு திட்டங்களை தேடி வங்கிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஏறி இறங்கி வருகின்றனர்.

Also Read: தலிபான்களை ஒடுக்க இந்தியாவின் உதவியை நாடிய ஆப்கானிஸ்தான் அரசு!

சந்தைகளில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் கூட, வருங்கால வைப்பு நிதி சேமிப்பை மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக பரிந்துரைக்கின்றனர். இதில் இருக்கும் சாதகமான அம்சமென்றால் கண்ணுக்குத் தெரியாத சேமிப்பாக இருக்கும். கையில் பணத்தை வாங்கி, வேறொரு திட்டத்தில் முதலீடு செய்வதைவிட, சேமிப்புக்குப் பிறகே பணம் உங்களுக்கு வரும் என்பது பி.எப் சேமிப்பின் சிறப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் சந்தை அபாயங்களை எப்போதும் எதிர்நோக்கி கொண்டே இருப்பார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ப முதலீடு வரவு அல்லது நஷ்டமாக இருக்கும். ஆனால், வருங்கால வைப்பு நிதியில் அப்படியான ரிஸ்க்குகள் இருக்காது. தொடர் சேமிப்பு இருக்கும்பட்சத்தில் 35 வது ஆண்டின் இறுதியில் நீங்கள் கோடீஸ்வரராக நிச்சயம் இருப்பீர்கள்
Published by:Arun
First published:

Tags: EPF, Epfo, News On Instagram, PF AMOUNT

அடுத்த செய்தி