Home /News /business /

இந்த மாதத்தில் இருந்து மாற்றத்திற்கு வரும் பிஎஃப் விதிகள்.. நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

இந்த மாதத்தில் இருந்து மாற்றத்திற்கு வரும் பிஎஃப் விதிகள்.. நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

பிஎஃப்

பிஎஃப்

2022 - 2023 நிதியாண்டில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வரையறையில் வரும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிராவிடண்ட் ஃபண்ட் (பிஎஃப்) அக்கவுண்டில் சேர்க்கும் பணத்திற்கு வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

2022 - 2023 நிதியாண்டில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வரையறையில் வரும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிராவிடண்ட் ஃபண்ட் (பிஎஃப்) அக்கவுண்டில் சேர்க்கும் பணத்திற்கு வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு மேற்பட்ட பங்களிப்பு தொகையை கொண்ட ஊழியர்களுக்கு, அந்தத் தொகைக்கான வரி பிடித்தம் செய்வதற்கான செயல் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது.

அதே சமயம், இந்த புதிய விதி அமலுக்கு வரும்போது, அரசு ஊழியர்களுக்கான வரி விதிப்பு இல்லா வரம்பு என்பது ரூ.5 லட்சம் வரையில் அதிகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பிஎஃப் திட்டத்தின் கீழ் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் ஓய்வுகால பலன்களை மனதில் வைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிஎஃப் விதி மாற்றம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

யாருக்கு வட்டி பிடித்தம் பொருந்தும்:

மிக அதிகமாக ஊதியம் பெறும் ஊழியர்களை குறி வைத்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது நாட்டில் உள்ள பெரும்பாலான வரி செலுத்தும் நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. புதிய வருமான வரிச் சட்ட விதிகளின் படி, இனி பிஎஃப் அக்கவுண்ட் என்பது வரி பிடித்தம் செய்யக் கூடியது மற்றும் வரி பிடித்தம் அற்றது என இரண்டு வகையாக பிரிக்கப்பட உள்ளன. இதில், குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், ஊழியரின் பங்களிப்பு தொகைக்கு மட்டுமே வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது. வேலை வழங்கும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகையில் வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

also read : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

ரூ.21 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு ஊதியம் பெறுவோருக்கு கவலை இல்லை :

பிஎஃப் திட்டத்தில் அதிக தொகையை வரவு வைத்து வரும், பெரிய அளவுக்கு ஊதியம் பெறும் நபர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. பிஎஃப் உடன் சேர்த்து ஆண்டுக்கு ரூ.21 லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் பெறும் நபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஒட்டுமொத்த பிஎஃப் வாடிக்கையாளர்களில் இதுபோல அதிக ஊதியம் பெறுபவர்கள் 1 சதவீத அளவு மட்டுமே இருப்பார்கள் என்று நிதித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சுருக்கமாக சொன்னால், பெரும்பாலான பிஎஃப் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் இந்த வரி விதிப்பு முறை குறித்து கவலை கொள்ள வேண்டியிருக்காது.

முந்தைய பிஎஃப் முதலீடுகளுக்கு வட்டி உண்டா:

வருமான வரித்துறைக்கான கொள்கை ஆவணங்களை உருவாக்கும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சார்பில் அண்மையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகைகளுக்கு எப்போதும் போலவே வரி விதிப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகான பங்களிப்பு தொகைகளுக்கு மட்டுமே வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Epfo

அடுத்த செய்தி