அப்ளை செய்த 2 நாளில் பிஎஃப் பணம் கிடைக்கும்! மறக்காமல் இதை செய்யுங்கள்

பிஎஃப் அக்கவுண்ட்

நெருக்கடியான சூழலில் பலம் தங்களது பிஎஃப் பணத்தை ஈஸியாக எடுக்கலாம்.

  • Share this:
    பிஎஃப் சந்தாதார்கள் பிஎஃப் அட்வான்ஸ் சிறப்புச் சலுகையின் கீழ் பிஎஃப் பணத்தை எடுத்தால் 2 நாட்களில் பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும் தெரியுமா?

    தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வருங்காலத்திற்கு மற்றும் அவசர தேவைக்கு உங்கள் கணக்கில் போடப்படும் பிஎஃப் பணம் மிகவும் உபயோகமானது.அதை அடிக்கடி எடுத்து வீண் செய்யாதீர்கள். அதே நேரம் உங்களுக்கான பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கணக்கில் போடுகிறதா? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் பே சிலிப்பில் இருக்கும் UAN நம்பரை தெரிந்து கொண்டு ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிஃப் நம்பரை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த பிஎஃப் கணக்கில் வட்டி, புதிய அப்டேட் என மத்திய அரசு அவ்வப்போது மாற்றங்களை அறிவிக்கும். அந்த வகையில் கொரோனா நெருக்கடியில் மத்திய அரசு அறிவித்த "outbreak of pandemic (Covid-19)" இந்த ஆப்சனை பயன்படுத்தி நீங்கள் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் 2 நாட்களில் பிஎஃப் முன் பணத்தை எடுக்கலாம்.
    கொரோனா சிகிச்சை போன்ற மருத்துவச் செலவுகளுக்கு இந்த ஆப்சனை பயன்படுத்தி பிஎஃப் பணத்தை நீங்கள் எடுக்கலாம்.

    also read... எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் லக்கி தான்.. ஏன் தெரியுமா?

    கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் 75 சதவீதம் அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்குச் சமமான தொகையை நீங்கள் எடுக்கலாம் . அதே போல் ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் வேலையை இழந்த பிஎஃப் சந்தாதார்கள் இனி பிஎஃப் அட்வான்ஸ் சிறப்புச் சலுகையின் கீழ் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 75 சதவீத தொகையை எடுக்க அவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த சலுகை தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. உங்களுக்கு இந்த ஆப்சன் ஆன்லைனில் காட்டுகிறதா? என செக் செய்து இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


    Published by:Sreeja Sreeja
    First published: