PF New Rule: புதிய PF விதி அமல்: இதை செய்யலனா இந்த மாதத்தில் இருந்து உங்கள் கணக்குக்கு பணம் வராது!

EPF

PF கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்காத ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் அவர்களின் பங்கை, பிஃப் கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும்.

  • Share this:
ஜூன் மாதம் முதல் PF விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், ஊழியர்கள் தங்களின் பிஃப் கணக்கின் உலகளாவிய கணக்கு எண்ணுடன் (UAN ) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பினை மேற்கொள்ளாவிட்டால் இந்த மாதம் முதல் உங்களின் பிஃப் கணக்கில், நிறுவனத்தின் சார்பில் பண வரவு வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கால் பலரும் தங்களது வேலைகளுக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி வாடி வருகின்றனர். பலரது குடும்ப பொருளாதாரம் கடந்த ஆண்டை போலவே மீண்டும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் கோவிட் -19 இரண்டாம் அலை பலருக்கு தூக்கமில்லாத இரவுகளை அளித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலிலும் அடிப்படை தேவைகளுக்காக ஏற்பட்டுள்ள பண நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பது அவர்களின் ஊதியத்தில் மாதா மாதம் பிடிக்கப்பட்டு வரும் இபிஎஃப் (EPF) தொகையாகும்.

கோவிட் -19 காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது EPF கணக்கிலிருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க உங்கள் EPF கணக்கிலிருக்கும் தொகையின் ஒரு பகுதியை நீங்கள் திரும்ப பெறலாம்.

Also Read:    பி.எஃப். பணத்தை மூன்றே நாளில் பெறலாம்.. விண்ணப்பிக்கும் வழி இதோ!

இந்த நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142 வது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியரின் PF கணக்கின் UAN எண்ணுடன், ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் நீங்கள் வேலை பார்த்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை உங்கள் PF கணக்கில் வந்து சேராது. இது தொடர்பான அறிவிப்பை EPFO வெளியிட்டிருக்கும் நிலையில் இந்த மாற்றத்தினை ஊழியர்கள் மேற்கொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Also Read:   EPF கணக்கிலிருந்து உங்கள் பணத்தை ஆன்லைனில் எளிதாக எடுப்பது எப்படி?

PF கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்காத ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் அவர்களின் பங்கை, பிஃப் கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும். மேலும் பிஃஎப் கணக்கில் இருந்து கோவிட் அட்வான்ஸ் தொகையையும் எடுக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை உங்களின் பிஃஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்துவருகிறீர்கள் என்றால் கவலைப்படத்தேவையில்லை. உடனடியாக www.epfindia.gov.in என்ற தளத்துக்கு சென்று உங்கள் யூசர்நேம், பாஸ்வோர்டு உள்ளீடு செய்து, உங்கள் கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்து விடுங்கள். பிஃப் கணக்கில், ஆதார் இணைக்கப்பட்ட பின்னர் கடந்த கால நிலுவைத் தொகையினை உங்களின் கணக்கில் நிறுவனம் சேர்த்துவிடும்.
Published by:Arun
First published: