• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்? உங்களை கோடீஸ்வரராக்கும் பி.எப்!

ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்? உங்களை கோடீஸ்வரராக்கும் பி.எப்!

பணம் - மாதிரிப்படம்

பணம் - மாதிரிப்படம்

இந்த வட்டி விகிதம் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கும் வட்டியைவிட அதிகம். அதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வேலைக்கு சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் பணம் எடுத்தால் வருங்கால வைப்பு நிதிக்கு வரி உண்டு.

  • Share this:
மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அனைவரும், மாத இறுதியில் Salary slip பார்க்கும்போது கடும்கோபம் வரும். ஏனென்றால் அதில் பல்வேறு காரணங்களுக்காக சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும். ஆனால், அதில் இருக்கும் பி.எப் பிடித்தம் மட்டும், சேமிக்கிறோம் என்கிற ரீதியில் மனசுக்கு நிறைவாக இருக்கும். சேமிப்புக்கும் உத்திரவாதம், முதலீட்டுக்கு உரிய வட்டியும் கிடைத்துவிடும் என்பதால், பெரிய முதலீட்டாளர்கள் கூட வருங்கால வைப்பு நிதியை முதலீடாக பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் விரும்பினால், கூடுதலாக பி.எப் தொகை பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அறிவுறுத்தலாம். இது ஒருபுறம் இருக்க, நீங்கள் முதலீடு செய்யும் பி.எப் தொகை மூலம் கோடீஸ்வரராகலாம் என்று கூறினால் நம்புவீர்களா?. நம்புங்கள் இது சாத்தியமே. மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் வாங்கினால்போதும், நீங்கள் பி.எப் மூலம் கோடீஸ்வரராகலாம்.

எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். வங்கிகளே முதலீடுகளுக்கு 8.5 விழுக்காடு வட்டி கொடுக்காத நிலையில், பி.எப்பில் செய்யப்படும் முதலீடுக்கு 8.5 விழுக்காடு என்ற அடிப்படையில் வட்டி கொடுக்கப்படுகிறது. அதனால், 25 ஆயிரம் மாதச் சம்பளத்தில் வேலைக்கு செல்லும் ஒருவர், 35 ஆண்டுகள் பி.எப்பில் முதலீடு செய்து வந்தால் போதும், முதிர்வு காலம் முடிவடைந்தவுடன் உங்கள் கைகளில் சுமார் 1.65 கோடி ரூபாய் இருக்கும்.

இந்த வட்டி விகிதம் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கும் வட்டியைவிட அதிகம். அதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வேலைக்கு சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் பணம் எடுத்தால் வருங்கால வைப்பு நிதிக்கு வரி உண்டு. 5 ஆண்டுகளைக் கடந்துவிட்டால் பி.எப் சேமிப்புக்கு வரி கிடையாது. ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டால், பி.எப் தொகையை எடுக்காமல், அந்தப் பணத்தை அப்படியே புதுக்கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். 35 ஆண்டுகளில் இடையில் ஒரு முறை கூட இந்த தொகையில் இருந்து பணத்தை எடுக்கக்கூடாது.

Also read... ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க பெஸ்ட் வங்கி எது? ஒரு லிஸ்டே இருக்கு!

நீண்ட கால முதலீடு திட்டங்களில், நடைமுறையில் இருக்கும் மற்ற திட்டங்களைக் காட்டிலும் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மாத ஊதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பை அறிந்து கொள்ளதாத பலர், சிறந்த முதலீடு திட்டங்களை தேடி வங்கிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஏறி இறங்கி வருகின்றனர்.

சந்தைகளில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் கூட, வருங்கால வைப்பு நிதி சேமிப்பை மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக பரிந்துரைக்கின்றனர். இதில் இருக்கும் சாதகமான அம்சமென்றால் கண்ணுக்குத் தெரியாத சேமிப்பாக இருக்கும். கையில் பணத்தை வாங்கி, வேறொரு திட்டத்தில் முதலீடு செய்வதைவிட, சேமிப்புக்குப் பிறகே பணம் உங்களுக்கு வரும் என்பது பி.எப் சேமிப்பின் சிறப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: