• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • PF பேலன்ஸ்: அக்கவுண்டுல எவ்வளவு பணம் இருக்குன்னு இனிமே இப்படி கூட தெரிஞ்சிக்கலாம்!

PF பேலன்ஸ்: அக்கவுண்டுல எவ்வளவு பணம் இருக்குன்னு இனிமே இப்படி கூட தெரிஞ்சிக்கலாம்!

பிஎஃப் பேலன்ஸ்

பிஎஃப் பேலன்ஸ்

pf அக்கவுண்டுக்கு கொடுத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

  • Share this:
    வருங்கால வைப்பு நிதி அக்கவுண்ட் உங்களுக்கு இருக்கிறதென்றால், அதில் இருக்கும் தொகையை எஸ்.எம்.எஸ் மற்றும் ஆன்லைன் மூலம் எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

    கொரோனா பேரிடர் காலத்தில் பி.எப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. மத்திய அரசும் பி.எப் கணக்கு வைத்திருப்பவர்கள் அட்வான்ஸ் எடுத்துக் கொள்ள விதிமுறைகளை திருத்தி வெளியிட்டது. இதனால், ஆபத்தான காலகட்டத்தில் வருமானம் இல்லாமல் இருந்த மக்களுக்கு பி.எப் நிதி பெரும் உதவியாக இருந்தது.

    அண்மையில் வருங்கால வைப்பு நிதி குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 1.65 கோடி வருங்கால வைப்பு நிதி விண்ணப்பங்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 56,834 கோடி ரூபாய், பி.எப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், அட்வான்ஸ் வேண்டும் என 52.17 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து 11,182 கோடி ரூபாயை மத்திய அரசு, பயனாளர்களுக்கு கொடுத்துள்ளது.

    பி.எப் நிதியை தெரிந்துகொள்வது எப்படி?

    பி.எப் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம்தோறும் தவறாமல் பி.எப் நிதி பெறுகிறோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் EPFO portal -க்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மொபைலில் EPFO App, Umang செயலிகள் வழியாகவும் யூசர்கள் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பி.எப் நிதியை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், UAN எண் மற்றும் பாஸ்வேர்டை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    எஸ்.எம்.எஸ் வழியாக தெரிந்து கொள்வது எப்படி?

    ஆன்லைன் பயன்படுத்த தெரியாதவர்கள் அல்லது எளிமையாக பி.எப் நிதியை தெரிந்து கொள்ள விரும்புவர்கள், எஸ்.எம்.எஸ் வழியாக உங்கள் நிதியை தெரிந்து கொள்ளலாம். பி.எப் அக்கவுண்டுக்கு கொடுத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். சில விநாடிகளில் உங்கள் மொபைலுக்கு தற்போதைய இருப்பு குறித்த விவரம் குறுஞ்செய்தியாக வரும்.

    மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

    எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு உங்களுக்கு தெரியவில்லை என்றாலும், மிஸ்டு கால் கொடுத்தால் போதும். 011-22901406 என்ற எண்ணுக்கு பி.எப் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். உங்கள் எண்ணுக்கு முழு விவரம் தெரியப்படுத்தப்படும். வருங்கால வைப்பு நிதி உங்கள் அக்கவுண்டில் முறையாக செலுத்தப்படுகிறதா? என்பதை ஊழியராக நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். நிர்வாகம் முறையாக வருங்கால வைப்பு நிதியை உங்கள் அக்கவுண்டில் செலுத்தாதபோது, சிக்கல்களுக்கான சமிக்கை எனத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பணியாற்றும் நிறுவனம் சிக்கலில் இருந்தால், மாதந்தோறும் பி.எப் நிதியை செலுத்துவதில் தொய்வு ஏற்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: