முகப்பு /செய்தி /வணிகம் / EPFO: உங்க பிஎஃப் கணக்கின் பேலன்ஸ் தெரியணுமா? - ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!

EPFO: உங்க பிஎஃப் கணக்கின் பேலன்ஸ் தெரியணுமா? - ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!

PF பேலன்ஸ் பற்றிய தகவலை அறிய

PF பேலன்ஸ் பற்றிய தகவலை அறிய

EPFO கணக்கில் உள்ள பேலன்ஸ் ஐ எளிமையாக சரிபார்க்கலாம். PF பேலன்ஸ் பற்றிய தகவலை பற்றி அறிந்து கொள்ள தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்க PF பேலன்ஸ் குறித்த தகவல் SMS மூலம் அனுப்பப்படும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது EPFO ​​ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு வேலைகளில் ​​பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. மாதம் தோறும் ஒவ்வொரு பணியாளரின் சம்பளத்திலிருந்தும் 12 சதவீத ரொக்கம் PF கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல, நிறுவனமும் பணியாளரின் எதிர்கால பயனுக்காக அதே அளவு பணத்தை டெபாசிட் செய்யும்.

அதற்கு வட்டியும் கிடைக்கும். PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் EPFO ​​UAN எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த UAN நம்பரை வைத்து பிஎஃப் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறினாலும், உங்களின் UAN எண் மாறாது.

சிலருக்கு PF கணக்கில் உள்ள இருப்பு தொகையை எப்படி சரிபார்ப்பது என தெரியும், இன்னும் சிலருக்கு அது குறித்த தெளிவான தகவல் தெரியாது. இன்னும் சிலர், கணக்கு சரிபார்ப்பிற்கான செயல்முறை பெரியதாக இருப்பதால் மலைப்பார்கள். ஆனால், இனி அந்த பிரச்னை இல்லை. ஏனென்றால், இபிஎஃப்ஓ இருப்பை அறிய பல வசதிகளை அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்று தான் மிஸ்டு கால் முறை.

Also Read | ஆன்லைனில் EB பில் கட்டுவது எப்படி..?

ஆம், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால்.. உங்கள் பிஎஃப் இருப்புத் தொகை சில நொடிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வடிவில் அனுப்பப்படும். நீங்கள் மிஸ்டு கால் கொடுக்க வேண்டிய எண் 9966044425 ஆகும். உங்களுக்கு அனுப்பப்படும் செய்தியில், UAN எண், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி, ஆதாரின் முதல் 2 இலக்க எண் மற்றும் கடைசி ஐந்து இலக்கங்கள், பான் கார்டு தகவல் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.

அத்துடன், கடந்த முறை உங்கள் PF கணக்கு பங்களிப்பு விவரங்கள், மொத்த PF இருப்பு தொகை ஆகியவை உங்களுக்கு வழங்கப்படும். இதற்கு, உங்களின் ஒருங்கிணைந்த போர்ட்டலில் உங்கள் மொபைல் எண்ணை UAN உடன் பதிவு செய்யப்பட வேண்டும். வங்கி கணக்கு, பான் கார்டு, ஆதார் அட்டையில் ஏதேனும் கேஒய்சி இருக்க வேண்டும்.

இந்த எண்ணை அழைப்பதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. இரண்டு ரிக் கொடுக்கப்பட்டதும், அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் ஒரு செய்தி வடிவில் விவரங்களைப் பெறுவீர்கள்.

First published:

Tags: EPF, Epfo, PF AMOUNT