இந்த காரணங்களுக்காக பிஎஃப் அப்ளை பண்ணுங்க.. உடனே பணம் கிடைக்கும்!

பிஎஃப் பணத்தை எடுத்தல்

பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். ஆன்லைன் முறையில் UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

 • Share this:
  அவசர காலத்தில்  பிஎஃப் பணத்தை அடிக்கடி எடுக்கும் பழக்கம் கொரோனா காலத்தில் அதிகம் புழக்கத்தில் வந்துள்ளது.

  கொரோனா பெருந்துயர் காலத்தில் பல குடும்பங்களை பிஎஃப் பணம் வாழ வைத்தது. தனியார் நிறுவனங்களில் திடீரென்று வேலையை விட்டு நீக்கப்பட்ட நபர்கள் உடனே தங்களது சேமிப்பு பணமான பிஎஃப் பணத்தை அப்ளை செய்து எடுத்து அன்றாட செலவுகளை கழித்தனர். முன்பெல்லாம் பிஎஃப் பணம் மிகப்பெரிய சேமிப்பு பணமாக இருந்தது. அதை அவ்வளவு எளிதாக அப்ளை செய்து எடுத்திட முடியாது.

  ஆனால் இப்போது ஆன்லைனில் அப்ளை செய்வது மிகவும் எளிதாகிவிட்டதால் அடிக்கடி பணம் எடுக்கும் பழக்கமும் புழகத்தில் வந்துவிட்டது. சில நேரங்களில் இப்படி அவசரத்திற்காக பணத்தை எடுக்க முயற்சிக்கும் போது அவை நிராகரிக்கப்படுகின்றன அதற்கு பல காரணங்கள் உள்ளன.

  Also Read : வங்கிகள் ஏலம் விடும் வீடுகளை வாங்கினால் உங்களுக்கு தான் லாபம் தெரியுமா?

  பிஎஃப் பணத்தை எந்தெந்த காரணத்தை குறிப்பிட்டு அப்ளை செய்தால் உடனே பணம் கிடைக்கும் என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

  திருமணம், கல்வி, வீடு, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது. இவற்றிற்கு பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். ஆன்லைன் முறையில்
  UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். திருமண செலவுக்காக பணம் எடுக்க ஊழியர் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம்.

  Also Read : 5 வருஷத்துக்கு வங்கி தர வட்டியை விட இங்கு அதிகம்! பணத்தை பிளான் பண்ணி சேமியுங்கள்

  கல்வி செலவுக்காக வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம். எனினும் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்த ஊழியர்கள் மட்டுமே இந்த தொகையை எடுக்க முடியும். இது ஊழியரின் குழந்தைகள் 10ம் வகுப்புக்கு மேலாக செல்லும் போது எடுத்துக் கொள்ளலாம்.

  பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை கொரோனா காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.7 லட்சம் வரையில் கிடைக்கும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுப்போன்ற அவசியமான தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: