Home /News /business /

5 வருடம் ஆவதற்குள் பி.எஃப் பணத்தை எடுத்தால் யாருக்கு நஷ்டம்? அவசியம் தெரிந்து கொள்ளவும்!

5 வருடம் ஆவதற்குள் பி.எஃப் பணத்தை எடுத்தால் யாருக்கு நஷ்டம்? அவசியம் தெரிந்து கொள்ளவும்!

பிஎஃப்

பிஎஃப்

PF கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் ஆப்ஷன் செயலில் உள்ளது.

    தீவிர கோவிட்-19 தொற்று காலத்தில் ஊதிய குறைப்பு மற்றும் வேலை இழப்புகளை அனுபவித்த பல அலுவலக ஊழியர்களுக்கு தக்க சமயத்தில் உதவியது அவர்களின் பிஎஃப் அக்கவுண்ட்டில் இருந்த நிதி தான்.

    கொரோனா பேரிடர் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) விதிகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களால், பணியாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPF) முழு பணத்தையும் திரும்ப பெறுவது மற்றும் பகுதியளவு பணத்தை திரும்ப பெறுவது (partial withdrawal) உள்ளிட்ட சில நடைமுறைகள் எளிதாகவும் அதே சமயம் விரைவானதாகவும் மாறி இருக்கிறது. அக்கவுண்ட் வைத்திருப்போர் இப்போது தங்கள் EPF கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் ஆப்ஷன் செயலில் உள்ளது.

    கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் சந்தாதாரர்கள் வேலையை விட்டு வெளியேறிய பிறகு 1 மாதத்திற்குள் , ஒட்டுமொத்த EPF நிதியில் சுமார் 75% வரை திரும்பப் பெற அனுமதிக்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டது. அதே போல ஒரு ஊழியர் 2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது EPF கணக்கில் இருக்கும் 100% பணத்தையும் திரும்ப பெறலாம். எனினும் EPF அக்கவுண்ட்டிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியளவோ பணம் எடுப்பதற்கு முன் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய பாயிண்ட்ஸ்களை பார்க்கலாம்..

    * ஒரு ஊழியர் தனது EPF அக்கவுண்ட்டை துவக்கி 5 வருடம் ஆவதற்கு முன்பே அதிலிருந்து பணத்தை திரும்ப பெறுவது வரிக்கு உட்பட்டதாகிவிடும்.

    * உங்கள் EPF கணக்கை முந்தைய நிறுவனத்தில் இருந்து நீங்கள் ட்ரான்ஸ்ஃபர் செய்திருந்தால், வரி நோக்கங்களுக்காக மொத்த வேலை காலத்தைக் கணக்கிட முந்தைய நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்த காலமும் உங்கள் தற்போதைய நிறுவனத்தின் வேலை காலத்துடன் சேர்க்கப்படும்.

    * பணத்தை திரும்பப் பெறும் ஆண்டில் சர்வீஸின் பீரியட் 5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அந்த திரும்ப பெறப்பட்ட தொகை வருமான வரிக்கு உட்பட்டது.

    * EPF அக்கவுண்ட்டில் உள்ள தொகை 4 பகுதிகளை உள்ளடக்கியது. இதில் பணியாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் 2 பங்களிப்புகளிலும் பெறப்பட்ட வட்டி ஆகியவை சேர்ந்தே PF நிதி ஆகும்.

    * தொடர்ச்சியான பணிக்காலம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், EPF-க்கு நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அதில் பெறப்பட்ட வட்டி ஆகியவற்றுக்கு "income from other sources"-ன் கீழ் சந்தாதாரரின் வருமான வரி கணக்கில் வரி விதிக்கப்படும்.

    * அதே போல 5 ஆண்டுகளுக்கு முன் PF பணம் திரும்ப பெறப்பட்டால், EPF-க்கு சந்தாதாரரின் சொந்த பங்களிப்பில் பெறப்பட்ட வட்டிக்கும் 'income from other sources'-ன் கீழ் வரி விதிக்கப்படும்.

    * 5 ஆண்டுகள் முடிவதற்குள் பணம் திரும்ப பெறப்பட்டிருந்தால் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் அந்தப் பங்களிப்பில் நீங்கள் விலக்கு கோரியிருந்தாலும் கூட, ஊழியர்களின் சொந்த பங்களிப்பு 'salary'-ன் கீழ் வரிக்கு உட்பட்டது.

    வயசான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும் இந்த திட்டம் கைவிடாது!

    * 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் முன் PF-லிருந்து பணம் எடுப்பதற்கு 10% டிடிஎஸ் விதிக்கப்படும். இருப்பினும் எடுக்கும் பணம் ரூ.50,000-க்கும் குறைவாக இருந்தால் அல்லது குறிப்பிட்ட நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தி இருந்தால் TDS கழிக்கப்படாது.

    * குறிப்பிட்ட நிதியாண்டிற்கான அவரது நிகர வருமானம் வரி விதிக்கக்கூடிய வருமான வரம்புக்குக் கீழே இருந்தால், படிவம் 15G/15H-ஐ சமர்ப்பிப்பதன் மூலம் EPF பணத்தை திரும்பப் பெறுவதற்கான TDS-ஐ தவிர்க்கலாம். படிவம் 15H முதியவர்களுக்கானது (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் படிவம் 15G வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாதவர்களுக்கானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Epfo

    அடுத்த செய்தி