PF Balance Check : உங்க பிஎஃப் பேலன்ஸை ஈஸியா தெரிஞ்சுக்கலாம் - அதுக்கு நீங்க என்ன பண்ணனும்னு தெரியுமா?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

உங்கள் கணக்கில் முறையாக பணம் செலுத்தப்படுகிறதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அதுவும் UAN எனப்படும் பிரத்யேக எண் இல்லாமலேயே தெரிந்துகொள்ள முடியும்.

  • Share this:
பிஎஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சிறு தொகையை பிடித்தமாக எடுத்துக்கொள்ளும். மேலும் தொழிலாளர்களிடம் பெறப்பட்ட தொகைக்கு சமமான ஒரு தொகையை அவர்கள் பணிபுரியும் நிறுவனம் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் நமது பெயரில் செலுத்த வேண்டும்.

இந்த தொகையானது ஒவ்வொரு மாதமும் நமது பெயரில் சேமித்து வைக்கப்படும். பின்னர் நாம் பணி ஓய்வு பெறும்போதோ அல்லது வேலையில்லாமல் இருந்தாலோ அந்த பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் முறையான ஆவணங்களை சமர்பித்து பெற்று பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது நாம் இரண்டு மாதம் வேலையில்லாமல் இருந்தால் அந்த பணத்தை முழுமையாக பெற முடியும்.

மேலும், உங்கள் கணக்கில் முறையாக பணம் செலுத்தப்படுகிறதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அதுவும் UAN எனப்படும் பிரத்யேக எண் இல்லாமலேயே தெரிந்துகொள்ள முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ALSO READ : பிஎஃப் கணக்கில் தவறாக உள்ள பெயரை ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி?

முதலில் நீங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் வலைதளமான https://www.epfindia.gov.in என்ற பக்கத்திற்கு சென்று, அங்கு Our Services என்பதை கிளிக் செய்து, அங்கு For Employees என்பதை கிளிக் செய்யவும். அங்கு Member Passbook என்பதை கிளிக் செய்து, அங்கு உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை கிளிக் செய்து இருப்புத் தொகை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் .

அல்லது உங்களது பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உங்கள் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை உங்களது எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக வரும். அல்லது உங்கள் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்

EPFO-ன் இணையதள பக்கத்துக்கு சென்று தகவல் பெறுவது அனைவருக்கும் இயலாத காரியம். ஆனால் மிஸ்டு கால் கொடுத்து உங்கள் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை பெறுவது இலகுவானது. அதனால் பெரும்பாலானோர் அந்த முறையையே பின்பற்றுகின்றனர்.

ALSO READ : உங்கள் பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது? முழு விவரம்!

இந்த கொரோனா காலக்கட்டம் பிஎஃப் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. கொரோனா ஊரடங்கின் காரணமாக பலர் தங்களது வேலையை இழந்தனர். இதனையடுத்து அத்தியாவசிய தேவைகள், மருத்துவம் போன்ற முக்கிய தேவைகளுக்கு பணம் இல்லாமல் தவித்தனர். அத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் அவர்களுக்கு பிஎஃப் பெரிதும் கைக்கொடுத்து உதவியிருக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published: