• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • pf கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த தவறை எப்போதும் செய்ய கூடாதாம்!

pf கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த தவறை எப்போதும் செய்ய கூடாதாம்!

பிஎஃப் கணக்கு

பிஎஃப் கணக்கு

பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் DigiLocker என்கிற அரசாங்கத்தின் கிளவுட் தொழில்நுட்ப தளத்தில் பாதுகாப்பாக உள்ளன

  • Share this:
    மாதாந்திர சம்பளம் வாங்கும் அலுவலக பணி செய்பவர்களின் மிக முக்கியமான சேமிப்பு என இபிஎஃப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதியை கூறலாம்.

    தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பலரின் எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த சேமிப்பு பணம் பெரிதும் உதவும். இப்படி சேமிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் கையாள்வதும் மிக அவசியம். ஆன்லைன் வழியாக பெருகி வரும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வகையில், நமது சேமிப்பு கணக்கின் விவரங்களை எப்போதும் யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இதை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது.

    சமீப காலமாக ஆன்லைனில் சைபர் குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. வங்கி கணக்குகள் பற்றிய பிரபலமான சைபர் குற்றங்கள் வரிசையில் தற்போது இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களிடமும் புதுவித ஆன்லைன் மோசடி நடைபெறுவதாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இபிஎஃப்ஓ கணக்கை இணைப்பது பற்றிய பல மோசடி குற்றங்களும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு இபிஎஃப்ஓ கணக்கை இணைக்க உங்களிடம் OTP, ஆதார் எண், பான் நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர், UAN எண் போன்ற முக்கிய விவரங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் மோசடி செய்யும் கும்பல் கேட்பார்கள். குறிப்பாக வாட்ஸ்அப் போன்ற அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் செயலிகளின் மூலம் இந்த விவரங்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வருவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது சம்பந்தமாக பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளது. "எச்சரிக்கை! மோசடி செய்பவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள்! இபிஎஃப்ஓ சம்பந்தமாக உங்களின் ஆதார் எண், பான் நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர், UAN எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை இபிஎஃப்ஓ அமைப்பு எப்போதும் கேட்க மாட்டோம். எனவே அவற்றை யாரிடமும் பகிராதீர்கள்" என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும், யாராவது உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டோ அல்லது உங்களின் OTP-ஐ பகிர சொல்லியோ ஃபோன் கால் அல்லது மெசேஜ் செய்தால் அதனை அவசியம் தவிர்த்து விடுங்கள். இது போன்ற சந்தேகம் உள்ள அழைப்புகள் பற்றி www.epfindia.gov.in. என்கிற வெப்சைட்டிற்கு சென்று புகார் தரலாம்.

    இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் DigiLocker என்கிற அரசாங்கத்தின் கிளவுட் தொழில்நுட்ப தளத்தில் பாதுகாப்பாக உள்ளன. எனவே இதன் சேவைகளை பெற ஒருவர் முதலில் இதில் லாகின் செய்ய வேண்டும். UAN கார்டு, பென்ஷன் பேமெண்ட் ஆர்டர், திட்டச் சான்றிதழ் போன்ற பல்வேறு இபிஎஃப்ஓ சேவைகள் இந்த DigiLocker தளத்தில் அடங்கும்.

    இந்த வருட தீபாவளியை சிறப்பானதாக மாற்ற 5 கோடி இபிஎஃப்ஓ கணக்கு வந்திருப்போர்களுக்கு 2020-2021 நடப்பாண்டில் 8.5% வட்டி அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சர் தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT) இந்த வருட மார்ச் மாதத்தில் அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: