வருங்கால வைப்பு நிதி ஆணையம், தொழிலாளார்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில் கூட, ஏப்ரல் 1, 2022 முதல் வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்புக்கான புதிய வரிவிதிப்பு மற்றும் வரி விலக்கிற்கான தரநிலைகளை வெளியிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்குகள் பைனல் செட்டில்மெண்ட் ஆகாமல் அல்லது பணப்பரிமாற்றம் செய்யப்படாமல் இருந்தால் அந்த கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்ட தேதியில் TDS பிடித்தம் செய்யப்படும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. TDS என்பது வருவாய் ஆதாரத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடு தொகையை முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் ஆகும்.
வருங்கால வைப்பு நிதி ஆணையம், தனியார் துறை ஊழியர்களுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும், அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கும் மேலான பிஎஃப் பங்களிப்புகளுக்கு புதிய வரிக் கட்டமைப்பை நிறுவியுள்ளது. EPFO முறைகளின்படி, TDS தொகையானது 5,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், இந்திய குடிமகனுக்கு எவ்வித சலுகையும் கிடைக்காது. ஆனால் உறுப்பினரின் தனிப்பட்ட வரிப் பொறுப்பு அப்படியே இருக்கும்.
புதிய வகை கொரோனா குறித்த அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஒரு பிஎஃப் கணக்கு சரியான நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்கப்பட்டிருந்தால் TDS விகிதம் 10% ஆக இருக்கும் என்றும், TDS விகிதம் முறையான பான் எண்ணுடன் இணைக்கப்படவில்லை எனில், அது 20% ஆக, அதாவது இரு மடங்காக உயர்த்தப்படும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.
உங்கள் பான் கார்டு அப்டேட் செய்யப்படாததாகவோ, உங்கள் பிஎஃப் கணக்குடன் முறையாக இணைக்கபடாமலோ இருந்தால், வழக்கமான 10% ஐ விட இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
உங்கள் பிஎஃப் கணக்கை பான் எண்ணுடன் இணைப்பது எப்படி?
1: உங்களது இபிஎஃப் கணக்கை ஓபன் செய்ய, e-Seva போர்ட்டலுக்குச் சென்று யுஏஎன் எண், கடவுச்சொல், கேப்ட்சா உள்ளிட்டவைகளை பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும் (login).
2: போர்ட்டலுக்குள் நுழைந்ததும், மெயின் மெனுவில் உள்ள ‘மேனேஜ்’ (Manage) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
ரயில்வேயில் வேலை – 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
3: மேனேஜ்’ (Manage) என்பதற்குள் நுழைந்ததும், கேஒய்சி (KYC) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு, பான், ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், தேர்தல் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்கும் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
4: அதில் பான் எண் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்களுடைய தனிப்பட்ட பான் எண்ணை உள்ளிடவும். கூடுதல் கவனத்துடன் பான் கார்டில் உள்ள உங்களுடைய பெயரை தெளிவாக டைப் செய்து, பின்னர் Save என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
5: உங்களுடைய பெயர், பான் எண் ஆகியவைகள் சரிபார்க்கப்படும். உங்களின் அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் கேஒய்சி பதிவிட்ட கோரிக்கை அப்ரூவ் செய்யப்படும். இதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளப்படலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.