Home /News /business /

அதிக விலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவு

அதிக விலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவு

பெட்ரோல் - டீசல் விலை

பெட்ரோல் - டீசல் விலை

Petrol-diesel price: ஜெட் எரிபொருள் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 1,13,202.33 ஆக உயர்ந்துள்ளது, இதன் விளைவாக மாதந்திர விற்பனை 20.5 சதவீதம் குறைந்துள்ளது.

    இந்தியாவில் ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விலை 10 சதவீதமும், டீசல் விற்பனை 15 சதவீதமும் சரிவை கண்டுள்ளது.  எரிபொருட்களின் விலை அதிகரித்ததால் அவற்றின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இந்தியாவில் 137 நாட்களுக்கு எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்ததை தொடர்ந்து மார்ச் 22ம் தேதி மீண்டும் விலை ஏற்றப்பட்டது. மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதிவரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டது.  காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி முடிந்த முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 10 சதவீதமும் டீசல் விற்பனை 15.6 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. விலை உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதேபோல், காஸ் சிலிண்டர் விற்பனையும் 1.7 சதவீதம் குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: பேமென்ட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் முன் இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. SBI அறிவுறுத்தல்


    ஜெட் எரிபொருள் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 1,13,202.33 ஆக உயர்ந்துள்ளது, இதன் விளைவாக மாதந்திர விற்பனை 20.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை  உயர்த்தப்படாமல் ஒரே விலையில் உள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கும்  டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Diesel, Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி