பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம்.. மும்பையில் லிட்டர் ரூ 92.04க்கு விற்பனை

பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம்.. மும்பையில் லிட்டர் ரூ 92.04க்கு விற்பனை

பெட்ரோல் விற்பனை நிலையம்

பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சாமானிய மனித வாழ்க்கையில் நேரடி தொடர்புள்ளவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் மாறியுள்ளன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றமடைந்தால் அவை போக்குவரத்து செலவீனங்களில் சுமையை ஏற்படுத்தி அதன் மூலம் காய், கணி, ரேஷன் பொருட்கள் விலையிலும் ஏற்றத்தை தந்து மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. சமீப காலமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரத்தான் செய்கிறது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

பெட்ரோல் விற்பனை நிலையம்:


இதனிடையே டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பெட்ரோல் -டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை சந்தித்துள்ளன. டெல்லியில் இன்று பெட்ரோல் -டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 25 பைசா உயர்த்தின. இதனையடுத்து அங்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ₹85.45 ஆக அதிகரித்துள்ளது. டீசலில் விலை ரூ. 75.63 ஆக உள்ளது.

இதே போல மும்பையிலும் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூ. 92.04 என்ற அளவை எட்டியுள்ளது.

கடந்த 20 நாட்களில் 3வது முறையாக பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. கடந்த ஜனவரி 18 அன்று வரலாறு காணாத விலையை பெட்ரோல் சந்தித்தது. அப்போதும் லிட்டருக்கு 25 பைசா என உயர்த்தப்பட்டது. அப்போது டெல்லியில் பெட்ரோல் விலை ₹84.95 ஆக இருந்தது. மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ₹91.56 ஆக இருந்தது.

மேலும் படிக்க... எடியூரப்பாவின் சொந்த ஊரான சிவமோகாவில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் பலி: அண்டை மாவட்டங்களில் நில அதிர்வு!

அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 7 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 26 காசுகளும் உயர்த்தப்பட்டன.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ. 88.07 காசுகளாக உயர்ந்துள்ளது. அதே போல டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90காசுகளாவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: