Petrol Diesel Prices | சென்னையில் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியது...

பெட்ரோல் விற்பனை நிலையம்

கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ளது.

  • Share this:
    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியுள்ளது. இரண்டு தினங்களுக்குப் பிறகு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, 98 ரூபாய் 65 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 23 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 88 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், 92 ரூபாய் 83 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், 6 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 89 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 24)

    அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 103.89 ஆகவும், டீசல் விலை ரூ 95.79 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 97.76 ஆகவும், டீசல் ரூ 88.30 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 97.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு        ரூ 91.15 ஆகவும் விற்கப்படுகிறது.




























    City Petrol Diesel
    Delhi 97.76 88.30
    Mumbai 103.89 95.79
    Chennai 98.88 92.89
    Kolkata 97.63 91.15

     
    Published by:Vaijayanthi S
    First published: