Petrol Diesel Prices | உச்சத்தில் பெட்ரோல்,டீசல் விலை... இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

மாதிரி படம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 98.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.

    இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. தற்போதைய விலையேற்றம் தொடர்ந்தால் தமிழகத்திலும் ஓரிரு நாளில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்துவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Mekedatu | மத்திய அரசு அனுமதித்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் - எடியூரப்பா உறுதி

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 98.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    மேலும் படிக்க... Corona Vaccine | காலையில் தடுப்பூசி போட இரவே வந்து காத்திருந்த மக்கள்

    அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையே இன்றும் தொடர்கிறது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.76 பைசாவிற்கும், ஒரு லிட்டர் டீசல் 94.59 பைசாவுக்கும், ஸ்பீடு பெட்ரோல் 103.54 பைசாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 103.08 ஆகவும், டீசல் விலை ரூ 95.14 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 96.93 ஆகவும், டீசல் ரூ 87.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.84 ஆகவும், டீசல் லிட்டருக்கு        ரூ 90.54 ஆகவும் விற்கப்படுகிறது.
    Published by:Vaijayanthi S
    First published: